Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தொடர் மழையால் அணைக்கு நீர்வரத்து

தொடர் மழையால் அணைக்கு நீர்வரத்து

தொடர் மழையால் அணைக்கு நீர்வரத்து

தொடர் மழையால் அணைக்கு நீர்வரத்து

ADDED : ஜூலை 09, 2024 12:27 AM


Google News
Latest Tamil News
வால்பாறை;வால்பாறையில் பரவலாக பெய்யும் மழையால், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

வால்பாறையில் கடந்த சில நாட்களாக, தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்கிறது. வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில், பெய்யும் கனமழையினால், அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்து, தண்ணீர் வரத்தும் அதிகரித்துள்ளது. தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

மழை நீடிக்கும் நிலையில், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணையின் நீர்மட்டம், நேற்று காலை, 110.65 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு, 1,061கன அடி தண்ணீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு, 1,281 கனஅடி தண்ணீர் வீதம் பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு (மி.மீ.,):

சோலையாறு - 16, பரம்பிக்குளம் - 5, வால்பாறை - 47, மேல்நீராறு - 46, கீழ்நீராறு - 20, காடம்பாறை - 5, மேல்ஆழியாறு - 2, மணக்கடவு - 11, துணக்கடவு - 7, சர்க்கார்பதி - 20, வேட்டைக்காரன்புதுார் - 9, பெருவாரிப்பள்ளம் - 12, பொள்ளாச்சி - 4, நவமலை - 9 என்ற அளவில் மழை பெய்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us