/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வரத்து அதிகரிப்பு தக்காளி விலை சரிவு வரத்து அதிகரிப்பு தக்காளி விலை சரிவு
வரத்து அதிகரிப்பு தக்காளி விலை சரிவு
வரத்து அதிகரிப்பு தக்காளி விலை சரிவு
வரத்து அதிகரிப்பு தக்காளி விலை சரிவு
ADDED : ஜூலை 31, 2024 01:16 AM
தொண்டாமுத்துார்;தொண்டாமுத்துார் வட்டாரத்தில் வரத்து அதிகரித்துள்ளதால், தக்காளி விலை குறைந்துள்ளது.
தொண்டாமுத்துார் வட்டாரத்தில் விவசாயிகள், தங்களின் விளை பொருட்களை தொண்டாமுத்தூர் மற்றும் பூலுவபட்டியில் உள்ள தினசரி காய்கறி மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகின்றனர்.
மழை மற்றும் வரத்து குறைவு காரணமாக, இம்மாத துவக்கம் முதலே தக்காளி, விலை உயர்ந்து காணப்பட்டது. இந்நிலையில், தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால், விலை சரிவடைந்து வருகிறது. பூலுவபட்டி தினசரி காய்கறி மார்க்கெட்டில், கடந்த வாரம், 14 கிலோ எடையுள்ள ஒரு டிப்பர் தக்காளி, 600 ரூபாய்க்கு விற்பனையானது. வரத்து அதிகரித்ததால், நேற்று, 14 கிலோ எடையுள்ள ஒரு டிப்பர் தக்காளி, 300 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெளியூர் தக்காளி, வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், தக்காளி விலை மேலும் சரிவடையும் என, வியாபாரிகள் தெரிவித்தனர்.