/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வரும் 10ல் கோமாரி நோய் தடுப்பூசிப்பணிகள் துவக்கம் வரும் 10ல் கோமாரி நோய் தடுப்பூசிப்பணிகள் துவக்கம்
வரும் 10ல் கோமாரி நோய் தடுப்பூசிப்பணிகள் துவக்கம்
வரும் 10ல் கோமாரி நோய் தடுப்பூசிப்பணிகள் துவக்கம்
வரும் 10ல் கோமாரி நோய் தடுப்பூசிப்பணிகள் துவக்கம்
ADDED : ஜூன் 04, 2024 01:08 AM
கோவை:தேசிய கால்நடை நோய் தடுப்புத்திட்டத்தின் கீழ், கால்நடை பராமரிப்புத்துறை நடப்பாண்டு கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசிப்பணி வரும் 10ல் துவங்கி 21 நாட்கள் நடக்கிறது.
கோவை மாவட்டம் முழுக்க உள்ள, அனைத்து கிராமங்களிலும் உள்ள பசுக்கள், எருமை ஆகியவற்றிற்கு, இந்த தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
இப்பணிகள் சிறப்பாக நடைபெறும் பொருட்டு, இந்நோய்க்கான ஊசி மருந்துகள், அதற்காக உருவாக்கப்பட்ட குளிரூட்டும் அறைகளில், தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இங்கிருந்து, ஒவ்வொரு கிராமத்திற்கும் தடுப்பூசிப்பணி மேற்கொள்ளப்படும்.
இத்தடுப்பூசிப்பணிக்கென பிரத்யேகமாக ஏற்படுத்தப்பட்டுள்ள, குழுவினர் மூலம் ஒவ்வொரு கிராமத்திலும், தற்போது உள்ள பசுக்கள் மற்றும் எருமையினங்களை கணக்கிட்டு, தடுப்பூசி செலுத்தப்படும். இதன் வாயிலாக, 100 சதவீத தடுப்பூசிப்பணி மேற்கொள்ளப்படும்.
எனவே, கோவை மாவட்டத்திலுள்ள விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர், தங்களது பசுக்கள், எருதுகள், எருமைகள் மற்றும் 4 மாதத்திற்கு மேற்பட்ட இளங்கன்றுகளுக்கு, வரும் 10ம் தேதி முதல் கால் மற்றும் வாய் கோமாரி நோய் தடுப்பூசியை, தவறாமல் செலுத்திக்கொள்ள வேண்டும்.
இத்தகவலை, கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.