/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஒரே நாளில், 162 மி.மீ., மழை: சிறுவாணி 44 அடியை எட்டியது ஒரே நாளில், 162 மி.மீ., மழை: சிறுவாணி 44 அடியை எட்டியது
ஒரே நாளில், 162 மி.மீ., மழை: சிறுவாணி 44 அடியை எட்டியது
ஒரே நாளில், 162 மி.மீ., மழை: சிறுவாணி 44 அடியை எட்டியது
ஒரே நாளில், 162 மி.மீ., மழை: சிறுவாணி 44 அடியை எட்டியது
ADDED : ஜூலை 30, 2024 11:15 PM
கோவை;சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில், ஒரே நாளில், 162 மி.மீ., மழை பதிவாகியுள்ளது; நீர் மட்டம், 44 அடியாக உயர்ந்தது.கோவையின் முக்கிய நீராதாரங்களில் ஒன்றான சிறுவாணி அணை, மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது.
தமிழக-கேரள எல்லையில் அமைந்திருக்கும் சிறுவாணி அணையின் மொத்த நீர்த்தேக்க உயரம், 50 அடி. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது.இதனால் சிறுவாணி அணையின் நீர் மட்டம் படிப்படியாக அதிகரிக்க துவங்கியுள்ளது. கடந்த, 26ம் தேதி மழையின் காரணமாக, நீர் மட்டமானது, 43.23 அடியாக உயர்ந்தது. தொடர்ந்து மழை இருந்து வருவதால், அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி அடிவாரத்தில், 85 மி.மீ., மழையும், அணைப்பகுதியில், 162 மி.மீ., மழையும் பதிவாகியிருந்தது. இதையடுத்து அணையின் நீர்மட்டம், 44.08 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து, 10.158 கோடி லிட்டர் நீர், குடிநீருக்காக எடுக்கப்பட்டது.மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வரும் நாட்களில் அணையின் நீர்மட்டம், 45 அடியை தாண்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது. குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறுகையில்,'சிறுவாணி அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணையின் நீர் மட்டம் உயர்ந்து கொண்டே செல்கிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம், 45 அடியை ஓரிரு நாட்களில் எட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது,' என்றனர்.==கோவை மாவட்டத்தில் நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, பதிவான மழை அளவு:வேளாண் பல்கலை, 15.60, பெரிய நாயக்கன்பாளையம் , 2, மேட்டுப்பாளையம், 21, பில்லுார் அணை, 13, கோவை தெற்கு தாலுகா, 5.60, சூலுார் - 9, வாரப்பட்டி, 6, தொண்டாமுத்துார், 48, மதுக்கரை தாலுகா, 17, போத்தனுார், 15 மி.மீ.,பொள்ளாச்சி, 84, மாக்கினாம்பட்டி, 93, கிணத்துக்கடவு, 19, ஆனைமலை, 38, ஆழியார், 61, சின்கோனா, 232, சின்னக்கல்லார், 239, வால்பாறை பி.ஏ.பி., 194, வால்பாறை தாலுகா, 192, சோலையாறு, 185 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.கோவையை பொறுத்தவரை, கோவை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கடந்த இரு தினங்களாக மழை இருந்து வருகிறது. இதன் காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குனியமுத்துார் அணைகட்டில் வெள்ளநீர் அதிகளவு வந்தது. இதன் காரணமாக கோவை குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.