/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கற்பகம் பல்கலையில் வாள் வீச்சு எதிரணிகளுக்கு போச்சு பேச்சு மூச்சு! கற்பகம் பல்கலையில் வாள் வீச்சு எதிரணிகளுக்கு போச்சு பேச்சு மூச்சு!
கற்பகம் பல்கலையில் வாள் வீச்சு எதிரணிகளுக்கு போச்சு பேச்சு மூச்சு!
கற்பகம் பல்கலையில் வாள் வீச்சு எதிரணிகளுக்கு போச்சு பேச்சு மூச்சு!
கற்பகம் பல்கலையில் வாள் வீச்சு எதிரணிகளுக்கு போச்சு பேச்சு மூச்சு!
ADDED : ஜூலை 07, 2024 11:45 PM

கோவை;மாவட்ட அளவிலான சிலம்ப போட்டியில், 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று தங்களின் திறமையை வெளிப்படுத்தினர்.
கோவை மாவட்ட சிலம்பம் ஸ்போர்ட்ஸ் சங்கம், கற்பகம் நிகர்நிலை பல்கலை சார்பில் 2024 - 2025ம் ஆண்டுக்கான மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி, ஈச்சனாரி கற்பகம் நிகர்நிலை பல்கலை வளாகத்தில் நடந்தது.
மாணவ - மாணவியருக்கு மினி சப்-ஜூனியர், சப்-ஜூனியர், ஜூனியர் மற்றும் சீனியர் என நான்கு பிரிவுகளில் கம்பு வீச்சு, அலங்கார வீச்சு, வேல்கம்பு வீச்சு, ஒற்றை வாள் வீச்சு, இரட்டை வாள் வீச்சு, சுருள் வாள் வீச்சு, மான் கொம்பு வீச்சு, ஆயுத ஜோடி, புது ஆயுத வீச்சு, கம்பு சண்டை உள்ளிட்ட 13 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன.
போட்டி முடிவுகள்:
மினி சப் - ஜூனியர் மாணவர்கள் கம்பு சண்டையில் அப்துல் பதிர், ஆதர்ஷ், நிகித் ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். சீனியர் பிரிவு குத்து வரிசையில் மகந்த், கம்பு வீச்சில் கவுதம் கிருஷ்ணன், வேல் கம்பு வீச்சு மதன் பாபு ஆகியோர் வெற்றி பெற்றனர்.
மினி சப் - ஜூனியர் மாணவியர் கம்பு சண்டை 18 கிலோ எடை பிரிவில் வைஷ்ணா, தின்ஷா, கவியாழினி; 30 கிலோ எடைப்பிரிவில் அபூர்வா ஸ்ரீ, சவுபாமிகா, அபிலாஷினி ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.
முன்னதாக, போட்டியை கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி துவக்கி வைத்தார். கற்பகம் பல்கலை பதிவாளர் ரவி, உடற்கல்வித்துறை இயக்குனர் சுதாகர், கோவை மாவட்ட சிலம்பம் ஸ்போர்ட்ஸ் சங்க தலைவர் செல்வகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.