/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சட்டவிரோதமாக மதுபானம் கள் விற்பனை: 5 பேர் கைது சட்டவிரோதமாக மதுபானம் கள் விற்பனை: 5 பேர் கைது
சட்டவிரோதமாக மதுபானம் கள் விற்பனை: 5 பேர் கைது
சட்டவிரோதமாக மதுபானம் கள் விற்பனை: 5 பேர் கைது
சட்டவிரோதமாக மதுபானம் கள் விற்பனை: 5 பேர் கைது
ADDED : ஜூன் 21, 2024 11:51 PM
நெகமம்;நெகமம் பகுதியில், சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து, ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
இதில், நெகமம் - ரங்கம்புதூர் ரோட்டில் உள்ள டாஸ்மாக் மதுக்கடை அருகே, நெகமத்தை சேர்ந்த சவுந்தர்ராஜன், 39, என்பவரிடம் இருந்து ஐந்து மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. வடசித்தூர் டாஸ்மாக் மதுக்கடை அருகே ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தினேஷ், 24, என்பவரிடம் இருந்து 12 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததற்காக இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
கிணத்துக்கடவு, சொக்கனூர் ஊராட்சியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் நாகராஜ், 57, என்பவர் தோப்பில் இருந்து 2 லிட்டர் கள் மற்றும் கந்தசாமி, 62, என்பவர் தோப்பில் இருந்து 3 லிட்டர் கள்ளை பறிமுதல் செய்தனர்.
சொக்கனுரை சேர்ந்த பிரபு, 28, என்பவரிடம் இருந்து 5 மதுபாட்டில்கள் மற்றும் 2 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யபப்ட்டது. சட்டவிரோதமாக மதுபானம் மற்றும் கள் விற்றதாக, மூன்று பேரை கைது செய்தனர்.