/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சட்டவிரோத மது விற்பனையா? போலீசுக்கு தெரிவியுங்க! சட்டவிரோத மது விற்பனையா? போலீசுக்கு தெரிவியுங்க!
சட்டவிரோத மது விற்பனையா? போலீசுக்கு தெரிவியுங்க!
சட்டவிரோத மது விற்பனையா? போலீசுக்கு தெரிவியுங்க!
சட்டவிரோத மது விற்பனையா? போலீசுக்கு தெரிவியுங்க!
ADDED : ஜூன் 25, 2024 11:21 PM

கருமத்தம்பட்டி:'சட்டவிரோதமாக மது விற்கப்படுவது தெரியவந்தால், உடனே போலீசாருக்கு தகவல் அளிக்க வேண்டும்' என, போலீசார் தெரிவித்தனர்.
கருமத்தம்பட்டி அடுத்த கணியூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில், போலீஸ் - - பொதுமக்கள் நல்லுறவு கூட்டம் நடந்தது. ஊராட்சி தலைவர் வேலுசாமி தலைமை வகித்தார்.
துணைத்தலைவர், ஊராட்சி உறுப்பினர்கள், இன்ஸ்பெக்டர் சண்முகவேலு உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர்
கருமத்தம்பட்டி டி.எஸ்.பி., தங்கராமன் பேசியதாவது: பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்குவது போலீசாரின் முதல் கடமை. சட்டவிரோத செயல்களை தடுக்க, பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் தேவை. உங்கள் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான நபர்கள் நடமாட்டம் இருந்தாலோ, கஞ்சா விற்பது, சட்டவிரோதமாக மது விற்பது தெரிந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். குற்றம் நடப்பதை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். வீடுகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த முயற்சி எடுக்க வேண்டும். வீடுகளை பூட்டிவிட்டு வெளியூர் செல்லும் போது, போலீசாருக்கு தகவல் தெரிவித்தால், அப்பகுதியில் ரோந்து பணி அதிகரிக்கப்படும். இவ்வாறு, அவர் பேசினார்.