/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ போதை பொருள் விற்றால் தகவல் தெரிவிக்கலாம் போதை பொருள் விற்றால் தகவல் தெரிவிக்கலாம்
போதை பொருள் விற்றால் தகவல் தெரிவிக்கலாம்
போதை பொருள் விற்றால் தகவல் தெரிவிக்கலாம்
போதை பொருள் விற்றால் தகவல் தெரிவிக்கலாம்
ADDED : ஜூன் 18, 2024 10:32 PM
அன்னுார்:போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி காட்டம்பட்டி ஊராட்சியில் நேற்று முன்தினம்நடந்தது.
இதில் போலீஸ் எஸ்.ஐ., ராஜேந்திரன் பேசுகையில், ''போதைப் பொருள் விற்பது, வாங்குவது, பயன்படுத்துவது, இருப்பு வைத்திருப்பது குறித்து தெரிந்தால் அன்னுார் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் பெயர் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். போதை பழக்கத்தால் உடல் நலம், மனநலம், மற்றும் பொருளாதாரம் பாதிக்கப்படும். நம் இளைய தலைமுறை போதைக்கு அடிமையாகாமல் இருக்க போதை பொருள் விற்பனையை ஒழிப்பது அவசியம்,'' என்றார்.
நிகழ்ச்சியில், சிறப்பு உதவி ஆய்வாளர் கோபிநாத், துணைத் தலைவர் லட்சுமி காந்த், ஒன்றிய கவுன்சிலர் செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.