/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நேர்மை இருந்தால் எதையும் சாதிக்கலாம் நேர்மை இருந்தால் எதையும் சாதிக்கலாம்
நேர்மை இருந்தால் எதையும் சாதிக்கலாம்
நேர்மை இருந்தால் எதையும் சாதிக்கலாம்
நேர்மை இருந்தால் எதையும் சாதிக்கலாம்
ADDED : ஜூலை 28, 2024 01:09 AM

கோவை:ஜெம் பவுண்டேஷன் சார்பில், ஜெம் மருத்துவமனை தலைவர் டாக்டர் பழனிவேலுவின் சுயசரிதை புத்தகம் 'கட்ஸ்' வெளியீட்டு விழா, கோவை நீலாம்பூரில் உள்ள ஓட்டலில் நேற்று மாலை நடந்தது.
புத்தகத்தை, டாடா குழும தலைவர் சந்திரசேகரன் மற்றும் முன்னாள் சி.பி.ஐ., இயக்குனர் கார்த்திகேயன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ், டாக்டர் பழனிவேலுவின் பள்ளி தலைமை ஆசிரியர் வையாபுரி ஆகியோர் வெளியிட்டனர்.
விழாவில், பா.ஜ.,தலைவர் அண்ணாமலை பேசுகையில், ''பெரும் ஞானம் இருந்தால் மட்டுமே, நல்ல மனிதனாக மாற முடியும். நேர்மை இருந்தால் எதையும் சாதிக்க முடியும். வாழ்க்கையை எளிமையாக நடத்தினால், சாதனைகள் தேடி வரும். எதையும் எதிர்த்து கேட்கும் போர் குணம் வேண்டும்,'' என்றார். டாடா குழும தலைவர் சந்திரசேகரன் பேசுகையில், ''நம் வாழ்வில் பெரும்பாலான விஷயங்களை, நாம் தீர்மானிக்க முடியாது. நடப்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
சூழ்நிலைகளை நமது முயற்சியால், சாதகமாக மாற்றி வெற்றி பெற வேண்டும். உங்கள் குணம் உங்கள் வாழ்க்கையை தீர்மானிக்கும்,'' என்றார்.
விழாவில், ஜெம் மருத்துவமனை இணை நிர்வாக இயக்குனர் பிரவீன்ராஜ் வரவேற்றார். டாக்டர் பழனிவேலு ஏற்புரை வழங்கினார்.
அமைச்சர்கள் சுவாமிநாதன், சக்கரபாணி, முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, செங்கோட்டையன், அன்பழகன், தங்கமணி, காமராஜ், பா.ம.க., தலைவர் அன்புமணி, த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.