/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஊராட்சியை பிரித்தால் வளர்ச்சி பணி பாதிக்கும் ஊராட்சியை பிரித்தால் வளர்ச்சி பணி பாதிக்கும்
ஊராட்சியை பிரித்தால் வளர்ச்சி பணி பாதிக்கும்
ஊராட்சியை பிரித்தால் வளர்ச்சி பணி பாதிக்கும்
ஊராட்சியை பிரித்தால் வளர்ச்சி பணி பாதிக்கும்
ADDED : ஜூலை 08, 2024 11:30 PM
அன்னூர்:'ஊராட்சியை பிரித்தால், வளர்ச்சி பணி பாதிக்கும்,' என கோவை கலெக்டரிடம் வார்டு உறுப்பினர்கள் மனு அளித்தனர்.
ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், வளர்ச்சிப் பணிகளை வேகமாக முடிக்கவும், ஊழியர்களின் வேலைப்பளுவை குறைக்கவும், அரசின் அனைத்து திட்டங்களும் அனைத்து பயனாளிகளுக்கும் விரைவில் சென்று சேருவதற்காக பெரிய ஊராட்சி ஒன்றியங்களையும் ஊராட்சிகளையும் பிரிக்க வேண்டும் என ஆய்வு செய்து பட்டியல் தயாரித்து அரசுக்கு பரிந்துரை கடிதம் அளித்துள்ளது.
இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கஞ்சப்பள்ளி ஊராட்சி தலைவர் சித்ரா மற்றும் வார்டு உறுப்பினர்கள், கோவை கலெக்டர் கிராந்தி குமாரிடம் நேரில் கொடுத்த மனுவில், 'கஞ்சப்பள்ளி ஊராட்சியில் மக்கள் தொகை குறைவு.
கிராமங்களும் குறைவு. ஊராட்சியை இரண்டாகப் பிரித்தால், வளர்ச்சி பணி பாதிக்கும். அரசுக்கு நிதி இழப்பு ஏற்படும். பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே ஊராட்சியை இரண்டாகப் பிரிக்கக் கூடாது. இது குறித்து ஊராட்சி மன்ற கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றி சமர்ப்பிக்கிறோம்,' என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.