/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சீரமைப்பு பணிகள் நடந்தால் அறிவிப்பு பலகை வையுங்க! சீரமைப்பு பணிகள் நடந்தால் அறிவிப்பு பலகை வையுங்க!
சீரமைப்பு பணிகள் நடந்தால் அறிவிப்பு பலகை வையுங்க!
சீரமைப்பு பணிகள் நடந்தால் அறிவிப்பு பலகை வையுங்க!
சீரமைப்பு பணிகள் நடந்தால் அறிவிப்பு பலகை வையுங்க!
ADDED : மார் 11, 2025 09:44 PM
பொள்ளாச்சி, ; பொள்ளாச்சி நகரில், நாளுக்கு நாள் வாகனங்களின் இயக்கம் அதிகரித்து வருகிறது. அதிகப்படியான வாகனங்கள் இயக்கப்படும் நிலையில், நெடுஞ்சாலைகள் விரிவுபடுத்தப்பட்டும் வருகின்றன.
இதுதவிர, நகர சாலைகளிலும் அவ்வப்போது புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது ஒரு புறமிருக்க, ரோட்டின் நடுவே, பாதாள சாக்கடையின் ஆளிறங்கு குழாயில் அடைப்பை நீக்குதல், கசிவான மற்றும் உடைந்த குடிநீர் குழாயை சீரமைத்தல், சென்டர்மீடியனில் படிந்துள்ள மணலை அகற்றுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இவ்வாறு, சாலையில் எந்தவொரு பணிகள் மேற்கொண்டாலும், 'ஆட்கள் பணிபுரியும் இடம்'; சீரமைப்பு பணி நடப்பதால் மெதுவாக செல்லவும்,' போன்ற முறையான அறிவிப்பு பலகைகள் வைக்கப்படுவதில்லை. இதனால், அதிவேகமாக செல்லும் வாகன ஓட்டுநர்கள், விபத்தை ஏற்படுத்தும் சூழலை சந்திக்கின்றனர். எனவே, சாலையில் சீரமைப்புப் பணி மேற்கொள்ளும் போது, அப்பகுதியில் வாகன ஓட்டுநர்களை அறிவுறுத்தும் வகையில், விழிப்புணர்வு பலகை வைக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.