/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நான்கு வழிச்சாலை பணிகளை விரைந்து முடியுங்க! பொதுமக்கள் எதிர்பார்ப்பு நான்கு வழிச்சாலை பணிகளை விரைந்து முடியுங்க! பொதுமக்கள் எதிர்பார்ப்பு
நான்கு வழிச்சாலை பணிகளை விரைந்து முடியுங்க! பொதுமக்கள் எதிர்பார்ப்பு
நான்கு வழிச்சாலை பணிகளை விரைந்து முடியுங்க! பொதுமக்கள் எதிர்பார்ப்பு
நான்கு வழிச்சாலை பணிகளை விரைந்து முடியுங்க! பொதுமக்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 08, 2024 12:50 AM

பொள்ளாச்சி;பொள்ளாச்சி - திண்டுக்கல் நான்கு வழிச்சாலை பணிகள் கடந்த, ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இப்பணிகளைவிரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
மத்திய அரசின், 'பாரத் மாலா பிரயோஜனா' திட்டத்தின் கீழ், பொள்ளாச்சி - திண்டுக்கல் கமலாபுரத்தை இணைக்கும் வகையில் நான்கு வழிச்சாலை திட்டம், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது.
மொத்தம், 3,649 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய நான்கு வழிச்சாலை அமைக்கப்படுகிறது.
பொள்ளாச்சி - மடத்துக்குளம், 50.07 கி.மீ., மடத்துக்குளம் - ஒட்டன்சத்திரம், 45.38 கி.மீ., ஒட்டன்சத்திரம் - கமலாபுரம், 36.51 கி.மீ., என, 131.96 கி.மீ., துாரத்துக்கு ரோடு அமைக்கப்படுகிறது.
அதில், 80 சதவீதம் புறவழிச்சாலையாக அமையும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அதில், ஆச்சிப்பட்டி அருகே கடந்தாண்டு டிச., மாதம் நிலம் கையகப்படுத்தப்பட்ட பகுதியில் கட்டடங்கள் அகற்றப்பட்டு பாலம் கட்டும் பணிகள் துவங்கப்பட்டன. பணிகள் மந்தமாக நடப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
பொதுமக்கள் கூறியதாவது:திண்டுக்கல் நான்கு வழிச்சாலை பணிகள் துவங்கப்பட்டு, ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் பணிகள் முழுமையாக முடிவடையாமல் இழுபறியாக நடக்கிறது. இப்பணிகள் எப்போது முடியும் என்ற நிலையே காணப்படுகிறது.
அதில்,ஆச்சிப்பட்டி அருகே 2,166 சதுர மீட்டருக்கு தென்னை மரங்கள், கட்டடங்கள் அகற்றப்பட்டது. இங்கு, மேம்பாலம் கட்டப்பட்டு சர்வீஸ் ரோடு அமைக்கப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கட்டடம் அகற்றப்பட்ட பின்னர்,
பாலம் கட்டும் பணிகள் துரிதப்படுத்தி விரைந்து முடியும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், பாலத்தில் பாதியளவு பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளன; மிக மந்தமாக பணிகள் நடக்கின்றன. பாலம் கட்டும் பணிகள் மட்டுமின்றி, நான்கு வழிச்சாலை பணிகளை இன்னும் தாமதப்படுத்தாமல், விரைந்து முடித்துபயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்தால் பயனாக இருக்கும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.