/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ விருந்தோம்பல் எப்படி இருக்கணும்! பள்ளி மாணவிகளுக்கு விளக்கம் விருந்தோம்பல் எப்படி இருக்கணும்! பள்ளி மாணவிகளுக்கு விளக்கம்
விருந்தோம்பல் எப்படி இருக்கணும்! பள்ளி மாணவிகளுக்கு விளக்கம்
விருந்தோம்பல் எப்படி இருக்கணும்! பள்ளி மாணவிகளுக்கு விளக்கம்
விருந்தோம்பல் எப்படி இருக்கணும்! பள்ளி மாணவிகளுக்கு விளக்கம்
ADDED : ஜூலை 22, 2024 09:09 PM

ஆனைமலை;ஆனைமலை அருகே, அரசு பள்ளியில், 'விருந்தும் போற்றுதலும்' என்பதை உணர்த்தும் வகையில், வாழை இலலையில் விருந்து படைத்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.
ஆனைமலை அருகே, கோட்டூர் மலையாண்டிபட்டிணம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில், தமிழர்களின் பண்பாட்டை உணர்த்தும் வகையில், 'விருந்தும், போற்றுதலும்' என்ற பாடம் உள்ளது.
இதை தற்போதைய தலைமுறையினருக்கு விருந்தினர் மற்றும் விருந்து உபசரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பாடத்தை செயல்விளக்கம் செய்து காண்பிக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக, இனிப்பு, காய்கறிகள் கொண்ட கூட்டு, குழம்பு, ரசம் உள்ளிட்ட பலவகையான உணவு தயார் செய்து எடுத்து வரப்பட்டது. அதன்பின், மாணவியருக்கு வாழை இலையில் உணவு பரிமாறப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் சிவபிரியா தலைமை வகித்தார்.
தமிழ் ஆசிரியர் உமா கூறியதாவது:
வீட்டுக்கு வரும் விருந்தினரை, முகமலர்ச்சியோடு வரவேற்று உண்ண உணவும், இருக்க இடமும் கொடுத்து அன்பு பாராட்டுவதே விருந்தோம்பல். விருந்தினர் என்றால் உறவினர் என்று இக்காலத்தினர் கருதுகின்றனர்.
உறவினர் என்பது வேறு, விருந்தினர் என்பது வேறாகும். முன்பின் அறியாத புதியவர்களுக்கே விருந்தினர் என்று பெயர். விருந்தே புதியது என தொல்காப்பியர் கூறியுள்ளார்.
விருந்தோம்பலை வலியுறுத்தி ஓர் அதிகாரத்தையே திருவள்ளுவர் இல்லறிவியலில் அமைத்திருக்கிறார்.
இத்தகையை சிறப்புமிக்க விருந்தோம்பல் குறித்து மாணவியருக்கு தெரிவிக்கும் வகையில், பசுமரத்து ஆணி போல, மனதில் பதிய வைக்க மதிய உணவு தயார் செய்து மாணவியருக்கு வழங்கப்பட்டது.
இவ்வாறு, அவர் கூறினார்.