/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வீடு இல்லாதவர்களுக்கு மட்டுமே குடியிருப்பு! தென்னை ஓலை மட்கினால் உரம் மாற்றி யோசிக்கும் விவசாயிகள் விண்ணப்பிக்க வரும் 1ம் தேதி முகாம் வீடு இல்லாதவர்களுக்கு மட்டுமே குடியிருப்பு! தென்னை ஓலை மட்கினால் உரம் மாற்றி யோசிக்கும் விவசாயிகள் விண்ணப்பிக்க வரும் 1ம் தேதி முகாம்
வீடு இல்லாதவர்களுக்கு மட்டுமே குடியிருப்பு! தென்னை ஓலை மட்கினால் உரம் மாற்றி யோசிக்கும் விவசாயிகள் விண்ணப்பிக்க வரும் 1ம் தேதி முகாம்
வீடு இல்லாதவர்களுக்கு மட்டுமே குடியிருப்பு! தென்னை ஓலை மட்கினால் உரம் மாற்றி யோசிக்கும் விவசாயிகள் விண்ணப்பிக்க வரும் 1ம் தேதி முகாம்
வீடு இல்லாதவர்களுக்கு மட்டுமே குடியிருப்பு! தென்னை ஓலை மட்கினால் உரம் மாற்றி யோசிக்கும் விவசாயிகள் விண்ணப்பிக்க வரும் 1ம் தேதி முகாம்
ADDED : ஜூன் 28, 2024 11:47 PM

பொள்ளாச்சி:கிட்டசூராம்பாளையத்தில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளுக்கு விண்ணப்பம் பெறும் முகாம் வரும், 1ம் தேதி நடக்கிறது.
பொள்ளாச்சி அருகே, கிட்டசூராம்பாளையம் எம்.ஜி.ஆர்., நகரில், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வாயிலாக, 'அனைவருக்கும் வீடு' திட்டத்தின் கீழ், பொருளாதாரத்தில் நலிவற்ற வீடற்ற ஏழை, எளிய, ஆதிதிராவிட இன மக்களுக்கு குடியிருப்புகள் கட்டப்படுகின்றன.
மொத்தம், 512 குடியிருப்புகள், 45.98 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. ஒரு குடியிருப்பின் விலை, 8.98 லட்சமாகும். பயனாளிகள் பங்களிப்பு தொகை, ஒரு லட்சத்து, 48 ஆயிரத்து, 59 ரூபாயாகும்.
ஒவ்வொரு குடியிருப்பும், 400 சதுர அடி பரப்பளவு கொண்டது. வரவேற்பறை, படுக்கையறை, சமையல் அறை, குளியல் அறை மற்றும் கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில், குடியிருப்பு வேண்டி விண்ணப்பம் செய்வதற்கு, வேறு எங்கும் வீடோ, நிலமோ இருக்க கூடாது. ஆதிதிராவிடர் (எஸ்.சி.,) வகுப்பை சார்ந்த வீடற்ற ஏழை, எளிய மக்கள் மற்றும் ஆண்டு வருமானம், 3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
மேலும், அரசின் சார்பில் வீடோ, நிலமோ பெற்று இருக்க கூடாது. ஒரு ரேஷன் கார்டுக்கு ஒரு வீடு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்கான முகாம், வரும், 1ம் தேதி பொள்ளாச்சி கிட்டசூராம்பாளையம் சிவாலிக் மெட்ரிக் பள்ளி அருகே, எம்.ஜி.ஆர்., நகர் திட்ட பகுதியில் நடக்கிறது. காலை, 10:00 முதல் மாலை, 4:00 மணி வரை முகாம் நடக்கிறது.
கணவன், மனைவி ஆதார் கார்டு நகல், ரேஷன் கார்டு நகல், ஜாதிச்சான்றிதழ் நகல், பாஸ்போர்ட் அளவு போட்டோ - 2, வங்கி கணக்கு புத்தகம் நகல் போன்ற ஆவணங்களுடன் வர வேண்டும். இத்தகவலை, கோவை மாவட்ட நிர்வாக பொறியாளர் அறிவித்துள்ளார்.