Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தோட்டக்கலை தொழில் வாய்ப்பு; வேளாண் பல்கலையில் பயிற்சி

தோட்டக்கலை தொழில் வாய்ப்பு; வேளாண் பல்கலையில் பயிற்சி

தோட்டக்கலை தொழில் வாய்ப்பு; வேளாண் பல்கலையில் பயிற்சி

தோட்டக்கலை தொழில் வாய்ப்பு; வேளாண் பல்கலையில் பயிற்சி

ADDED : ஆக 04, 2024 11:02 PM


Google News
கோவை : தமிழ்நாடு வேளாண் பல்கலை தோட்டக்கலை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், தோட்டக்கலை துறையில், நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தொழில்வாய்ப்புகள் குறித்த பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதற்கான பயிற்சி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, பழப்பயிர்கள் அடர் நடவு தொழில்நுட்பம் குறித்து ஒரு நாள் பயிற்சி வரும், 21ம் தேதி நடக்கிறது. இதற்கு, 2,360 ரூபாய் கட்டணமாக செலுத்தவேண்டும்.

இதில், பழப்பயிர்கள் அறிமுகம், அடர் நடவு, மேலாண்மை, நோய் மேலாண்மை உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பங்களும் பயிற்றுவிக்கப்படும். ஒட்டு கட்டுதல் தொழில்நுட்பம் குறித்து, வரும் 28ம் தேதி ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

உலர் மலர்கள் மற்றும் பூங்கொத்து சார்ந்த தொழில்வாய்ப்புகள் குறித்து செப்., 18-19 ம் தேதி இரண்டு நாட்கள் பயிற்சி நடக்கவுள்ளது.

அக்., 11, 12ம் தேதி ஹைட்ரோபோனிக்ஸ், ஏரோபோனிக்ஸ், வெர்டிக்கல் கார்டனிங், குறித்த பயிற்சிகள் நடைபெறவுள்ளன. இதற்கு கட்டணம், 4,720 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. மலர்களில் இருந்து எண்ணெய் பிரித்தெடுத்தல் குறித்து, இரண்டு நாள் பயிற்சி நவ., 26, 27 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது.

நர்சரி தொழில்நுட்பங்கள் மற்றும் வணிக ரீதியில் தோட்டக்கலை பயிர்கள் வளர்ப்பு குறித்து, டிச., 18. 19 ஆகிய நாட்கள் பயிற்சி நடைபெறவுள்ளது.

ஒவ்வொரு பயிற்சிகளின் சாராம்சங்கள், கட்டண விபரங்கள், பிற விபரங்களை, https://tnau.ac.in/ என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us