/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வருகிறது சர்வதேச தரத்துடன் ஹாக்கி மைதானம்! நடவடிக்கைகளை துரிதப்படுத்தியது மாநகராட்சி வருகிறது சர்வதேச தரத்துடன் ஹாக்கி மைதானம்! நடவடிக்கைகளை துரிதப்படுத்தியது மாநகராட்சி
வருகிறது சர்வதேச தரத்துடன் ஹாக்கி மைதானம்! நடவடிக்கைகளை துரிதப்படுத்தியது மாநகராட்சி
வருகிறது சர்வதேச தரத்துடன் ஹாக்கி மைதானம்! நடவடிக்கைகளை துரிதப்படுத்தியது மாநகராட்சி
வருகிறது சர்வதேச தரத்துடன் ஹாக்கி மைதானம்! நடவடிக்கைகளை துரிதப்படுத்தியது மாநகராட்சி
ADDED : ஜூன் 12, 2024 01:37 AM

கோவை:கோவையில் சர்வதேச தரத்தில் புதிய ஹாக்கி மைதானம் அமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அ.தி.மு.க., ஆட்சியில், கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி பள்ளி வளாகத்தில், 4.5 கோடி ரூபாயில், சர்வதேச ஹாக்கி மைதானம் அமைக்க திட்டமிட்டு, வேலை துவக்கப்பட்டது.
முதல்கட்டமாக, 1.5 கோடி ரூபாய் செலவழித்து, சில வேலைகள் செய்யப்பட்டன. பின், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், ரூ.19.50 கோடி கூடுதலாக ஒதுக்கப்பட்டது.
அதை, 'டுபிட்கோ' ஏற்க மறுத்து, திட்ட அறிக்கையை திருப்பி அனுப்பப்பட்டது. அதனால், விளையாட்டுத்துறை மூலமாக செயல்படுத்த திட்டமிடப்பட்டது.
தி.மு.க., ஆட்சியில் இத்திட்டத்தை செயல்படுத்த விளையாட்டு ஆர்வலர்கள் பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
மாநில அரசு இத்திட்டம் ரூ.10 கோடி செலவில் நிறைவேற்றப்படும் என, அறிவித்தது. இதையடுத்து கோவை மாநகராட்சி சார்பில் இத்திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, சென்னையில் அமைக்கப்பட்ட ஹாக்கி மைதானம் போல், அனைத்து வசதிகளுடன் கூடிய மைதானத்தை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறுகையில், ''புதிய ஹாக்கி மைதானம் சர்வதேச தரத்துக்கு ஏற்படுத்தப்படும். இதற்காக, சென்னை ஹாக்கி மைதானத்தை ஏற்படுத்திய வல்லுனர்களை அழைத்துள்ளோம்.
அவர்கள் வழங்கும் ஆலோசனைகளின்படி, மைதானம் கட்டப்பட உள்ளது. புதிய மைதானத்தில், பயிற்சி மைதானம் ஒன்றும் ஏற்படுத்தப்பட உள்ளது.
இதுதவிர, கேலரி, பெண் வீராங்கனைகளுக்கு உடைமாற்றும் அறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளன. விரைவில் பணிகள் துவங்கப்பட உள்ளன,'' என்றார்.