Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ விதைக்குள் ஒளிந்திருக்கிறது மரம் பாதுகாப்பாக 45 வகைகள் சேகரம்

விதைக்குள் ஒளிந்திருக்கிறது மரம் பாதுகாப்பாக 45 வகைகள் சேகரம்

விதைக்குள் ஒளிந்திருக்கிறது மரம் பாதுகாப்பாக 45 வகைகள் சேகரம்

விதைக்குள் ஒளிந்திருக்கிறது மரம் பாதுகாப்பாக 45 வகைகள் சேகரம்

ADDED : ஜூன் 11, 2024 11:51 PM


Google News
- நமது நிருபர் -

கோவையில் உள்ள வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தில், 45 வகையான வெவ்வேறு ரகங்களின் மர விதைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

மரத்திலிருந்து விழும் ஒவ்வொரு விதையும், அந்த மரத்தின் ஒரு துளியாகவே விழுகிறது. அந்த ஒரு துளிக்குள் ஒரு முழு மரமும் இருப்பது தான், இயற்கையின் விந்தை.

நம் நாட்டு மரங்களின் விதைகளை சேகரித்து காப்பது, இப்போதைய தேவையாக உள்ளது. இப்பணியை, கோவையில் உள்ள வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

இதுகுறித்து, விஞ்ஞானி அனந்தலட்சுமி கூறியதாவது:

கோவை வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தில் உள்ள, 'விதை வங்கி' கடந்த 10ஆண்டுகளாகசெயல்படுகிறது.

ஒவ்வொரு மரமும் ஒரு குணத்தன்மை, வீரியத்தன்மை கொண்டது. தரம் வாய்ந்த மரங்களை மீளுருவாக்கம் செய்வது இதன் முக்கிய நோக்கம்.

தமிழகம், கேரளா மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும், அந்தமான் தீவு பகுதிகளிலும், மரங்களின் விதைகளை சேகரிக்கும் பணி நடந்தது. வனப்பகுதியில் உள்ள தாய் மரங்களில் இருந்து, விதைகளை சேகரிக்கிறோம்.

45 வகையான வெவ்வேறு ரகங்களின் மர விதைகளை சேகரித்து,மைனஸ் 20 டிகிரி சென்டிகிரேடில் பாதுகாத்து வருகிறோம். தேவைகளை பொறுத்து, இவை பயன்படுத்தப்படும்.

இவ்வாறு, கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us