/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கஞ்சா குற்றவாளிகள் இருவர் மீது பாய்ந்தது 'குண்டாஸ்' கஞ்சா குற்றவாளிகள் இருவர் மீது பாய்ந்தது 'குண்டாஸ்'
கஞ்சா குற்றவாளிகள் இருவர் மீது பாய்ந்தது 'குண்டாஸ்'
கஞ்சா குற்றவாளிகள் இருவர் மீது பாய்ந்தது 'குண்டாஸ்'
கஞ்சா குற்றவாளிகள் இருவர் மீது பாய்ந்தது 'குண்டாஸ்'
ADDED : ஜூலை 04, 2024 05:08 AM

கோவை: கஞ்சா வழக்கு குற்றவாளிகள் இருவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை, கருமத்தம்பட்டி பகுதியில், 14 கிலோ கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த தேனி மாவட்டத்தை சேர்ந்த செல்வம்,44, மற்றும் இளையராஜா,47, ஆகியோரை கருமத்தம்பட்டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதார பராமரிப்பிற்கு, பாதகமான செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக இருவர் மீதும், குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க, கோவை எஸ்.பி., பத்ரிநாராயணன் பரிந்துரை செய்தார். இதையடுத்து, மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் உத்தரவின் பேரில், இருவரும் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்து, சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த ஆண்டில் இதுவரை, 37 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.