/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பி.எஸ்.ஜி.,கல்லுாரியில் பட்டமளிப்பு விழா பி.எஸ்.ஜி.,கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
பி.எஸ்.ஜி.,கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
பி.எஸ்.ஜி.,கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
பி.எஸ்.ஜி.,கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
ADDED : ஜூலை 07, 2024 10:20 PM

கோவை;பீளமேடு, பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா, கல்லுாரி வளாகத்தில் நடந்தது. பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லுாரியின் ஆலோசகர் பிரகாசன் தலைமை வகித்தார்.
அகமதாபாத் இந்திய தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குனர் ஜெனரல் சுனில் சுக்லா சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
அவர் பேசுகையில், '' மாணவர்கள் தங்கள் துறைகளில் வரும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்,'' என்றார்.
ஒவ்வொரு பாடப் பிரிவிலும் முதலிடம் பிடித்த மாணவர்கள், தங்கப்பதக்கம் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், பயோ டெக்னாலஜி, பேஷன் டெக்னாலஜி உள்ளிட்ட எட்டு பாடப்பிரிவுகளில் பட்டப்படிப்பு முடித்த 685 இளங்கலை, முதுகலை மாணவர்கள் பட்டங்களை பெற்றனர். துறை தலைவர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட ஆயிரத்து 300க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.