/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சேதமடைந்த நிலையில் அரசு திட்ட வீடுகள்: சீரமைக்க மக்கள் வலியுறுத்தல் சேதமடைந்த நிலையில் அரசு திட்ட வீடுகள்: சீரமைக்க மக்கள் வலியுறுத்தல்
சேதமடைந்த நிலையில் அரசு திட்ட வீடுகள்: சீரமைக்க மக்கள் வலியுறுத்தல்
சேதமடைந்த நிலையில் அரசு திட்ட வீடுகள்: சீரமைக்க மக்கள் வலியுறுத்தல்
சேதமடைந்த நிலையில் அரசு திட்ட வீடுகள்: சீரமைக்க மக்கள் வலியுறுத்தல்
ADDED : ஜூலை 27, 2024 01:12 AM

கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, இம்மிடிபாளையத்தில் அரசு திட்டத்தில் கட்டப்பட்ட வீடுகள் சேதமடையும் நிலையில் இருப்பதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கிணத்துக்கடவு, சொலவம்பாளையம் ஊராட்சி இம்மிடிபாளையம் கிராமத்தில், 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு, 50க்கும் மேற்பட்டோருக்கு அரசு திட்டத்தில் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த வீடுகள் அனைத்தும், 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டவை.
இதில், சில வீடுகள் சேதமடைந்துள்ளதால், சிலர் கூட்டு குடும்பங்களாக வசித்து வருகின்றனர். தற்போது, மழை காலம் என்பதால் அப்பகுதியில் உள்ள வீடுகள் மேற்கூரை மற்றும் ஓடுகள் சேதம் அடைந்து காணப்படுகிறது. சில வீடுகளின் சுவர்கள் இடிந்து கீழே விழும் நிலையில் உள்ளது.
எனவே, அரசு திட்டத்தில் கட்டப்பட்ட வீடுகளை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்துகின்றனர்.
மக்கள் கூறியதாவது:
அரசு திட்டத்தில், 50 கச்சா வீடுகள் மற்றும் 25 ஐ.ஏ.ஒய்., திட்ட வீடுகள் கட்டப்பட்டன. பெரும்பாலான வீடுகள் சேதமடைந்த நிலையில் உள்ளன. சில வீடுகளில் மழை நீர் ஒழுகி குடியிருக்க முடியாத நிலை உள்ளது.
சேதமடைந்த வீடுகளை பார்வையிட அரசு அதிகாரிகள் பலர் ஆய்வு செய்தும், புகைப்படம் எடுத்தும் செல்கின்றனர். அதன்பின், எவ்வித நடவடிக்கையும் இல்லை.
கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் புதிதாக வீடு கட்ட இம்மிடிபாளையத்தில் ஒரு நபருக்கு மட்டுமே விண்ணப்பம் வந்துள்ளது. இப்பகுதியில் உள்ள வீடுகளை சீரமைக்க ஏதாவது ஒரு அரசு திட்டத்தின் வாயிலாக உதவ வேண்டும்.
எனவே, இப்பகுதி மக்கள் நலனை கருத்தில் கொண்டு, குடியிருக்கும் வீட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.