/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நல்லுறவு கபடி போட்டி கோவையில் துவக்கம் நல்லுறவு கபடி போட்டி கோவையில் துவக்கம்
நல்லுறவு கபடி போட்டி கோவையில் துவக்கம்
நல்லுறவு கபடி போட்டி கோவையில் துவக்கம்
நல்லுறவு கபடி போட்டி கோவையில் துவக்கம்
ADDED : ஜூன் 24, 2024 12:30 AM

கோவை;கோவை மாநகர போலீஸ், பொதுமக்கள் நல்லுறவு கபடி போட்டியை, போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.
கோவை மாநகர போலீஸ் சார்பில், சர்வதேச போதைப்பொருள் துன்புறுத்தல் தினத்தை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்ட அளவிலான கபடி போட்டி நடத்தப்படுகிறது.
நேரு ஸ்டேடியம் அருகில் உள்ள கபடி மைதானத்தில், நடக்கும் இப்போட்டியின் ஆண்கள் பிரிவில் 64 அணிகளும், பெண்கள் பிரிவில் 16 அணிகளும் பங்கேற்றுள்ளன.
நேற்று மற்றும் இன்று போட்டிகள் நடத்தப்பட்டு, இறுதிப்போட்டிக்கான அணிகள் தேர்வு செய்யப்படுகின்றன.
இறுதிப்போட்டி, வரும் 26ம் தேதி புரூக்பீல்டு மாலில் நடத்தப்படுகிறது.