/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்று போய் நாளை வா! மனு வாங்க மறுப்பு இன்று போய் நாளை வா! மனு வாங்க மறுப்பு
இன்று போய் நாளை வா! மனு வாங்க மறுப்பு
இன்று போய் நாளை வா! மனு வாங்க மறுப்பு
இன்று போய் நாளை வா! மனு வாங்க மறுப்பு
ADDED : ஜூன் 25, 2024 08:41 PM
அன்னுார்;அன்னூர் தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில், மதியத்திற்குப் பிறகு வந்தவர்களிடம் மனு பெறவில்லை என புகார் எழுந்துள்ளது.
கடந்த 20ம் தேதி, ஜமாபந்தி துவங்கியது. நேற்று சர்க்கார் சாமக்குளம் உள் வட்டத்தைச் சேர்ந்த வருவாய் கிராமங்களுக்கு ஜமாபந்தி நடந்தது. இதில் 476 மனுக்கள் பெறப்பட்டன.
அதிகபட்சமாக இலவச வீட்டு மனை பட்டா கோரி 249 மனுக்களும், இதற்கு அடுத்து பட்டா மாறுதல் கோரி 83 மனுக்களும், நில அளவை செய்யக்கோரி 45 மனுக்களும் மகளிர் உரிமை திட்டத்தில் 26 மனுக்களும் உள்பட 476 மனுக்கள் பெறப்பட்டன. மதியத்திற்குப் பிறகு வந்தவர்களிடம் மனு பெறவில்லை என புகார் எழுந்துள்ளது.
வெள்ளானைப்பட்டி விவசாயிகள் கூறுகையில், 'கலெக்டர் வெளியிட்ட அறிவிப்பில், காலை 10:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை மனுக்கள் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மதியம் 2:30 மணிக்கு அன்னூர் தாலுகா அலுவலகத்தில் மனு கொடுத்தபோது, 'நேரம் முடிந்து விட்டது. நாளை வழக்கமாக தரப்படும் மனுக்களுடன் கொடுங்கள்' என்று சொல்லி, திருப்பி அனுப்பி விட்டனர்' என்றனர்.