/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கூடலுார் வீடுகளில் விரிசல் ;புவியியல் துறை ஆய்வு கூடலுார் வீடுகளில் விரிசல் ;புவியியல் துறை ஆய்வு
கூடலுார் வீடுகளில் விரிசல் ;புவியியல் துறை ஆய்வு
கூடலுார் வீடுகளில் விரிசல் ;புவியியல் துறை ஆய்வு
கூடலுார் வீடுகளில் விரிசல் ;புவியியல் துறை ஆய்வு
ADDED : ஜூன் 30, 2024 01:10 AM

கூடலூர்:நீலகிரி மாவட்டம், கூடலுார், பந்தலுார் பகுதிகளில் ஐந்து நாட்களாக மழை பெய்து வருகிறது. மேல்கூடலுார், கோக்கால் பகுதிகளில் ஆங்காங்கே மழை நீர் சூழ்ந்து பாதிக்கப்பட்டது. அதே பகுதியில் திடீரென அடுத்தடுத்து ஏழு வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர்.
கூடலுார் ஆர்.டி.ஓ., செந்தில்குமார், குன்னுார் புவியியல் துறை உதவி செயற்பொறியாளர் சுரேஷ்குமார், பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரிசல் ஏற்பட்ட வீடுகளை நேற்று ஆய்வு செய்தனர்.
ஆர்.டி.ஓ., செந்தில்குமார் கூறுகையில், ''விரிசல் ஏற்பட்ட பகுதியில் புவியியல் துறை, பொதுப்பணி துறையினர் ஆய்வு செய்துள்ளனர். அறிக்கை கிடைத்தவுடன் அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். விரிசல் ஏற்பட்டுள்ள வீடுகளில், இரவில் யாரும் தங்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.