/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம் விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம்
விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம்
விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம்
விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம்
ADDED : ஜூலை 30, 2024 01:15 AM
வால்பாறை:ஹிந்து முன்னணி சார்பில், விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனைக்கூட்டம் வால்பாறையில் நடந்தது.
வால்பாறை தாலுகா ஹிந்து முன்னணி சார்பில் நடந்த ஆலோசனைக்கூட்டத்துக்கு, கோவை தெற்கு மாவட்ட துணைத்தலைவர் சேகர் தலைமை வகித்தார்.
கூட்டத்தில், வால்பாறை தாலுகா ஹிந்து முன்னணி சார்பில், 32ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, இந்த ஆண்டு செப்., மாதம் 7ம் தேதி பல்வேறு கோவில்களில், 108 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
அதன்பின், 15ம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் வால்பாறை நகருக்கு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு, மாலையில் நடுமலை ஆற்றில் விசர்ஜனம் செய்யப்படுகிறது.
வால்பாறை மலைப்பகுதியில் உள்ள அனைத்து கோவில்களிலும் ஹிந்து முன்னணி சார்பில் உழவாரப்பணி நடைபெறும். கோவிலை பாதுகாக்க வேண்டியது ஹிந்துக்களின் கடமை என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் உட்பட ஹிந்து முன்னணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.