/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ லாப ஆசை காண்பித்து ரூ.13.79 லட்சம் மோசடி லாப ஆசை காண்பித்து ரூ.13.79 லட்சம் மோசடி
லாப ஆசை காண்பித்து ரூ.13.79 லட்சம் மோசடி
லாப ஆசை காண்பித்து ரூ.13.79 லட்சம் மோசடி
லாப ஆசை காண்பித்து ரூ.13.79 லட்சம் மோசடி
ADDED : ஜூலை 02, 2024 11:01 PM
கோவை:பகுதிநேர வேலையில் அதிக லாபம் ஈட்டலாம் என, ரூ.13.79 லட்சம் மோசடி செய்தது குறித்து, மாநகர சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.
கோவை, கணபதி மணியகாரன்பாளையத்தை சேர்ந்தவர் மாதவராஜ்,59. இவரிடம் ஜெயாகனிதுரா என்பவர், 'டெலிகிராம் குரூப்' வாயிலாக, ஆன்லைனில் பகுதிநேர பணி இருப்பதாகவும், அதில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
இதை நம்பி, அந்நபர் தெரிவித்த வங்கி கணக்குக்கு ஏழு தவணைகளில் ரூ.13 லட்சத்து, 79 ஆயிரம் அனுப்பியுள்ளார். ஆனால், கூறியபடி அந்நபர் லாபத்தொகையை அனுப்பவில்லை.
அதன்பிறகு அவரை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. மாதவராஜ் மாநகர சைபர் கிரைம் போலீசில், புகார் அளிக்க வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.