/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நான்காம் டிவிஷன் லீக்: அக்சயா கல்லுாரி வெற்றி நான்காம் டிவிஷன் லீக்: அக்சயா கல்லுாரி வெற்றி
நான்காம் டிவிஷன் லீக்: அக்சயா கல்லுாரி வெற்றி
நான்காம் டிவிஷன் லீக்: அக்சயா கல்லுாரி வெற்றி
நான்காம் டிவிஷன் லீக்: அக்சயா கல்லுாரி வெற்றி
ADDED : ஜூன் 05, 2024 08:32 PM
கோவை : மாவட்ட அளவிலான நான்காவது டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டியில், அக்சயா இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி அணி, எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், 'எல்.ஜி., எக்யூப்மென்ட்ஸ் கோப்பைக்கான' நான்காவது டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டி, அவிநாசி ரோடு சி.ஐ.டி., கல்லுாரி மைதானத்தில் நடந்தது.
முதலில் பேட்டிங் செய்த தம்பி நினைவு கிரிக்கெட் கிளப் அணி, 36.1 ஓவர்களில் 137 ரன்கள் சேர்த்தது. அணிக்காக கிஷோர் குமார் (35) நிதானமாக விளையாடினார். அக்சயா கல்லுாரி அணியின் சாய் கோகுல் ராம், அசத்தலாக பந்து வீசி ஐந்து விக்கெட்கள் வீழ்த்தினார்.
பின்னர் களமிறங்கிய அக்சயா கல்லுாரி அணியின் இஸ்ரவேல் (57*), பிரபு (34*), சாய் கோகுல் (32) ஆகியோர் சிறப்பாக விளையாட, 24.1 ஓவர்களில் இரண்டு விக்கெட் மட்டும் இழந்து 138 ரன்கள் எடுத்த அபார வெற்றி பெற்றது.