/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழா முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழா
முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழா
முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழா
முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழா
ADDED : ஜூன் 03, 2024 11:16 PM

மேட்டுப்பாளையம்;முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு, ஊராட்சி தூய்மை பணியாளர்களுக்கு, இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டன.
காரமடை மேற்கு ஒன்றியம் மருதூர் ஊராட்சி பகுதியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா நடந்தது.
தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் சண்முகசுந்தரம், தூய்மை பணியாளர்களுக்கு, வேட்டி, சேலைகள் மற்றும் இனிப்புகளை வழங்கினார். காரமடை கிழக்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் ஆலங்கொம்பு, பெள்ளாதி, சிறுமுகை ஆகிய பகுதிகளில் பிறந்த நாள் விழா நடந்தது.
பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட, 27 வார்டுகளில், 101 இடங்களில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு தி.மு.க.,வினர் மாலை அணிவித்தனர். நிகழ்ச்சிக்கு, கூடலூர் நகராட்சி தலைவர் அறிவரசு தலைமை வகித்தார்.
கண்ணம்பாளையத்தில் கோவை தெற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் முருகேசன் தலைமையில் கொடியேற்றி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. கருணாநிதியின் உருவ படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இதே போல அரசூர், கருமத்தம்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் பிறந்த நாள் விழா நடந்தது.