/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஐவர் கால்பந்து போட்டி; திருப்பூர் அணி வெற்றி ஐவர் கால்பந்து போட்டி; திருப்பூர் அணி வெற்றி
ஐவர் கால்பந்து போட்டி; திருப்பூர் அணி வெற்றி
ஐவர் கால்பந்து போட்டி; திருப்பூர் அணி வெற்றி
ஐவர் கால்பந்து போட்டி; திருப்பூர் அணி வெற்றி
ADDED : ஜூன் 20, 2024 05:09 AM
மாவட்ட அளவிலான ஐவர் கால்பந்து போட்டியில், பெண்கள் பிரிவில், திருப்பூர் அணி வெற்றி பெற்றது.
அவிநாசி அருகே செம்பியநல்லுார் ஊராட்சி, பெரிய நாதம்பாளையத்தில் உள்ள கொங்கு கல்வி நிலையம் மேல்நிலைப் பள்ளியில், விக்டரி கால்பந்து கழகம் சார்பில், மாவட்ட அளவிலான ஐவர் கால்பந்து போட்டிகள் நடந்தன.
இதில், இரண்டாம் நாள் போட்டியில், 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் ஆண், பெண் என இரு பிரிவுகளாக நடைபெற்றது.
ஆண்கள் அணியில், ஈரோடு யுனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும், பெண்களுக்கான 14 வயது பிரிவில் திருப்பூர் தி பர்ஸ்ட் எய்ம் அகாடமியும் வென்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.