/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பட்டத்தரசி அம்மன் கோவிலில் திருவிழா பட்டத்தரசி அம்மன் கோவிலில் திருவிழா
பட்டத்தரசி அம்மன் கோவிலில் திருவிழா
பட்டத்தரசி அம்மன் கோவிலில் திருவிழா
பட்டத்தரசி அம்மன் கோவிலில் திருவிழா
ADDED : ஜூன் 08, 2024 12:16 AM
கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, வீரப்பகவுண்டனூர் பட்டத்தரசி அம்மன் கோவிலில் பூச்சாட்டு திருவிழா நடந்தது.
கிணத்துக்கடவு, சொக்கனூர், வீரப்பகவுண்டனூர், வெள்ளையம்மன், பொம்மியம்மன் உடனமர் மதுரை வீரன் மற்றும் பட்டத்தரசி அம்மன் கோவிலில் பூச்சாட்டு திருவிழா கடந்த, மே மாதம் 27ம் தேதி துவங்கியது.
திருவிழாவை முன்னிட்டு, முனியப்பன் சுவாமிக்கு சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சி நடந்தது. கடந்த மாதம், 28ம் தேதி நோன்பு சாட்டுதல் மற்றும் கங்கணம் கட்டும் நிகழ்ச்சிகள் நடந்தது.
கடந்த, 3ம் தேதி, விநாயகருக்கு பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபட்டனர். திருவிழாவை முன்னிட்டு, விரதம் இருந்த பக்தர்கள், 4ம் தேதி, சுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில், பூவோடு எடுத்து வழிபட்டனர்.
தொடர்ந்து சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கடந்த, 5ம் தேதி, சுவாமி சிலைகள் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டது. தொடர்ந்து மாவிளக்கு வழிபாடு, கிடா வெட்டுதல் மற்றும் சக்தி கரகம் ஆற்றில் விடும் நிகழ்ச்சிகள் நடந்தது.
கடந்த, 6ம் தேதி, பல்லக்கில் சுவாமி ஊர்வலம் சென்று, மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சி நடந்தது.
நேற்று, 7ம் தேதி, சுவாமிக்கு, சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்தது.