/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பருத்தியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள் பருத்தியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்
பருத்தியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்
பருத்தியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்
பருத்தியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்
ADDED : ஜூன் 04, 2024 11:41 PM
மேட்டுப்பாளையம்;காரமடை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள், பருத்தி செடிகளை அதிகம் சாகுபடி செய்து வருகின்றனர்.
மேட்டுப்பாளையம் அருகே காரமடை, தேக்கம்பட்டி, வெள்ளியங்காடு, தோலம்பாளையம், சுண்டகரை, திம்மம்பாளையம், கணுவாய்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தென்னை, பாக்கு, வாழை, தக்காளி விவசாயம் பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது. தற்போது இந்த பகுதிகளில் விவசாயிகள் பருத்தி செடிகளை, அதிகம் சாகுபடி செய்து வருகின்றனர்.
காரமடை பகுதி விவசாயிகள் கூறுகையில், 'பருத்தி சாகுபடிக்கு தண்ணீர் அதிகளவில் தேவைப்படுவதில்லை.15 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்சினாலே போதுமானது. பருத்தி முளைத்து 50 நாட்களில் பூக்க ஆரம்பித்து விடும்.
100 நாட்களில் பருத்தியை அறுவடை செய்துவிடலாம்.
தற்போது, காரமடை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில், பருத்தி செடிகள் அதிகம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது' என்றனர்.-----