/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மேட்டுப்பாளையம் ரயிலை பொள்ளாச்சி வரை நீட்டிக்கணும் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை மேட்டுப்பாளையம் ரயிலை பொள்ளாச்சி வரை நீட்டிக்கணும் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
மேட்டுப்பாளையம் ரயிலை பொள்ளாச்சி வரை நீட்டிக்கணும் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
மேட்டுப்பாளையம் ரயிலை பொள்ளாச்சி வரை நீட்டிக்கணும் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
மேட்டுப்பாளையம் ரயிலை பொள்ளாச்சி வரை நீட்டிக்கணும் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
ADDED : ஜூலை 28, 2024 01:03 AM

கோவை;விவசாயிகள் குறைதீர் கூட்டம், கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் கிராந்திகுமார் தலைமை வகித்தார்.
இதில் விவசாயிகள் பேசியதாவது:
ஊரகப் பகுதியில் இருந்து காய்கறியை நகருக்குள் கொண்டு வர, போதிய போக்குவரத்து வசதி இல்லை.
எனவேதான் காய்கறி விலை அதிகமாக இருக்கிறது. விவசாயிகள் எளிதில் பயன்படுத்தும் வகையில், எலெக்ட்ரிக் ரயில் சேவை துவக்கப்பட வேண்டும். சர்க்குலர் ரயில்கள் நகரின் போக்குவரத்து நெரிசலை, வெகுவாகக் குறைக்கும்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து, மெமு ரயில் போத்தனூர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தினமும் மூன்று முறை இயக்கப்படும் இந்த ரயிலை, பொள்ளாச்சி வரை நீட்டித்தால், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு சுற்றுப்பகுதி மக்களும், விவசாயிகளும் பயன்பெறுவர்.
கோவனூர் பகுதியில் புறம்போக்கு நிலத்தில் சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும்.
சுண்டக்காமுத்தூர் பகு தியில், விவசாய நிலங்களுக்கு மத்தியில் மாசுபடுத்தும் ரப்பர் தொழிற்சாலைக்கு அனுமதி அளிக் கப்பட்டுள்ளது; மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உக்கடம் -- காந்திபுரம் வழித்தடத்தில் ரூ.10 டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. புகாரின்பேரில் ஓரிரு பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டும், கட்டணக் கொள்ளை தொடர்கிறது.
ஆர்.டி.ஓ., அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து ஒரே சமயத்தில் சோதனை செய்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பசுந்தாள் உரத்துக்கான சணப்பை உள்ளிட்ட விதை கள், தோட்டக்கலைத் துறை வசம் இருப்பு இல்லை; பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.