/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ விவசாயிகள் வாழ்வாதார மேம்பாடு :வேளாண் பல்கலையில் கள ஆய்வு விவசாயிகள் வாழ்வாதார மேம்பாடு :வேளாண் பல்கலையில் கள ஆய்வு
விவசாயிகள் வாழ்வாதார மேம்பாடு :வேளாண் பல்கலையில் கள ஆய்வு
விவசாயிகள் வாழ்வாதார மேம்பாடு :வேளாண் பல்கலையில் கள ஆய்வு
விவசாயிகள் வாழ்வாதார மேம்பாடு :வேளாண் பல்கலையில் கள ஆய்வு
ADDED : ஜூன் 07, 2024 01:07 AM

கோவை;விரிவாக்கக் கல்வி இயக்ககம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் தமிழக அரசின் வேளாண்மை விவசாய நலத்துறை ஆகியவை இணைந்து, விரிவாக்க சீர்திருத்தங்களுக்கான மாநில விரிவாக்கத் திட்டம், வேளாண் தொழில் நுட்ப மேலாண்மை முகமை ஆதரவின் கீழ், ஆராய்ச்சி - விரிவாக்க இடர்பாடுகள் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.
வேளாண் பல்கலைக்கழக விரிவாக்க கல்வி இயக்குனர் முருகன் வரவேற்றார். பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி, நிகழ்ச்சியை துவக்கி வைத்து, ஒவ்வொரு இயக்குனரகத்தின் கீழும், பல்கலைக்கழகம் உருவாக்கிய தொழில்நுட்பங்கள் மற்றும் ரகங்களை, விவசாயிகளிடம் களப்பணியாளர்கள் ஊக்குவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
ஒவ்வொரு மாவட்டத்திலும், பல்கலைக்கழக விஞ்ஞானிகளை உள்ளடக்கிய உழவர் களப் பரிசோதனைகள் நடத்தப்பட வேண்டும்; அதனடிப்படையில் குறுகிய கால ஆராய்ச்சியை முன்மொழியலாம் என்று, கூடுதல் வேளாண் இயக்குனர் சங்கர சுப்ரமணியம் விளக்கினார்.
தமிழகத்தின் 31 வேளாண் அறிவியல் மையங்களில் இருந்தும் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், மூத்த விஞ்ஞானி மற்றும் தலைவர், 37 மாவட்டங்களை சேர்ந்த வேளாண் இயக்குனர்கள் மற்றும் உதவி வேளாண் இயக்குனர்கள் பங்கேற்று, மாநிலத்தில் விவசாய நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான ஆராய்ச்சிக்குரிய சிக்கல்கள் குறித்து விவாதித்தனர்.
நிகழ்ச்சியில் ஒரு பகுதியாக, விவசாய கள பிரச்னைகளுக்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விளக்கமளித்தனர்.வேளாண் பல்கலைக்கழக பயிற்சி பிரிவின் தலைவர் ஆனந்தராஜா நன்றி கூறினார்.