Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ போதையில் இருந்தவரிடம் பணம் பறிப்பு; 5 பேர் கைது

போதையில் இருந்தவரிடம் பணம் பறிப்பு; 5 பேர் கைது

போதையில் இருந்தவரிடம் பணம் பறிப்பு; 5 பேர் கைது

போதையில் இருந்தவரிடம் பணம் பறிப்பு; 5 பேர் கைது

ADDED : ஜூலை 05, 2024 12:23 AM


Google News
கோவை;காந்திபுரம் அருகே குடிபோதையில் படுத்துகிடந்தவரை வீட்டில் விடுவதாக அழைத்து சென்று பணம், மொபைல்போன் பறித்தவர்களை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு, கருங்கல்பாளையத்தை சேர்ந்தவர் ஆகாஷ்,21. இவர் ஆவாரம்பாளையத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த, 2ம் தேதி பெண்கள் மகளிர் கல்லுாரி அருகே குடிபோதையில் படுத்துகிடந்தார்.

அங்கு டூ வீலரில் வந்த பூளுவபட்டியை சேர்ந்த ராஜிவன்,23, சரவணம்பட்டியை சேர்ந்த கிஷோர்,18 ஆகியோர், ஆகாஷிடம் பேச்சுகொடுத்து ஆவாரம்பாளையம் அழைத்து செல்வதாக கூறியுள்ளனர். ஆகாஷ் அவர்களுடன் அமர்ந்து பயணித்துள்ளார்.

ஆவாரம்பாளையம் சென்று இறங்கியதும் ரூ.1,300 ரொக்கம், மொபைல் போன் காணாமல் போனது தெரிந்து ரேஸ்கோர்ஸ் போலீசாரிடம் ஆகாஷ் புகார் அளித்தார். இதுதொடர்பாக, ராஜிவன், கிஷோர் ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.

இது தொடர்பாக சிங்காநல்லுார் குட்டி நாயக்கன் லே-அவுட்டை சேர்ந்த அஜய்குமார்,25, தனியார் பஸ் கண்டக்டர் துாத்துக்குடியை சேர்ந்த லோகேஸ்வரன்,23, பூளுவபட்டியை சேர்ந்த கீதன்,22 ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us