/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயாவில் உடற்கல்வியியல் தேர்வு ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயாவில் உடற்கல்வியியல் தேர்வு
ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயாவில் உடற்கல்வியியல் தேர்வு
ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயாவில் உடற்கல்வியியல் தேர்வு
ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயாவில் உடற்கல்வியியல் தேர்வு
ADDED : ஜூன் 14, 2024 12:17 AM
கோவை: பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கலை அறிவியல் கல்லுாரியில் உடற்கல்வியியல் பட்டப்படிப்பிற்கான வீரர்கள் தேர்வு வரும், 20ம் தேதி நடக்கிறது.
விளையாட்டு வீரர்களுக்கு, ராமகிருஷ்ணா வித்யாலயா கல்லுாரியில் பி.எஸ்சி., உடற்கல்வியியல் மூன்றாண்டு படிப்பு வழங்கப்படுகிறது.
இப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு போலீஸ், டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இப்படிப்பில் சேர விரும்பும் 12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான தேர்வு ஜூன், 20ம் தேதி கல்லுாரி வளாகத்தில் நடக்கவுள்ளது.
இதில் தடகளம், பாக்ஸிங், இறகுப்பந்து, பூப்பந்து, கூடைப்பந்து, செஸ், கிரிக்கெட், கால்பந்து, ஹேண்ட்பால், ஹாக்கி, மல்லர்கம்பம், கோ கோ, கபடி, சிலம்பம், நீச்சல், டேபிள் டென்னிஸ், டேக்வாண்டோ, வாலிபால் உள்ளிட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்கலாம். பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு மதிய உணவு உள்ளிட்ட வசதிகளும் செய்து தரப்படுகிறது.
தேர்வு குறித்த விவரங்களுக்கு 99650 03619 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.