/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இ.என்.டி., டாக்டர்களுக்கு 'என்சிகான்' கருத்தரங்கம் இ.என்.டி., டாக்டர்களுக்கு 'என்சிகான்' கருத்தரங்கம்
இ.என்.டி., டாக்டர்களுக்கு 'என்சிகான்' கருத்தரங்கம்
இ.என்.டி., டாக்டர்களுக்கு 'என்சிகான்' கருத்தரங்கம்
இ.என்.டி., டாக்டர்களுக்கு 'என்சிகான்' கருத்தரங்கம்
ADDED : ஜூலை 25, 2024 10:39 PM
பொள்ளாச்சி : இந்திய அளவிலான இ.என்.டி., டாக்டர்கள் பங்கேற்ற, 'என்சிகான்' மருத்துவ கருத்தரங்கு, பொள்ளாச்சி எம்.சி.வி., மருத்துவமனையில், 14வது முறையாக நடந்தது. அகில இந்திய இ.என்.டி., மருத்துவ கழகத்தின் முன்னாள் தலைவர் மிலிந்த் வி கிர்ஸ்டன் தலைமை வகித்தார். பயிற்சி இயக்குனர் டாக்டர் ஆனந்த் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் சாந்தி ஆனந்த் வரவேற்றார்.
கருத்தரங்கில், காது கேளாத குழந்தைக்கு காக்லியர் என்ற உள்வைப்பு அறுவை சிகிச்சை வாயிலாக சிறந்த செவித்திறன் மற்றும் பேச்சு திறன் பெறுவதற்கு, நேரடியாக பயிற்சியை பேராசிரியர் எம்.வி., கிர்டைன் செய்து காண்பித்தார்.
மேலும், 10க்கும் மேற்பட்ட சிக்கலான அறுவை சிகிச்சை குறித்து, டாக்டர்களுக்கு தேவையான திறன்களை வளர்த்துக்கொள்ள பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், 150க்கும் மேற்பட்ட டாக்டர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை பயிற்சி செயலாளர் டாக்டர் ஐஸ்வர்யா ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் செய்து இருந்தனர். டாக்டர் பரத் முருகவேல் நன்றி கூறினார்.