/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பணிக்கு தகுதியுள்ளோர் விண்ணப்பிக்கலாம் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பணிக்கு தகுதியுள்ளோர் விண்ணப்பிக்கலாம்
கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பணிக்கு தகுதியுள்ளோர் விண்ணப்பிக்கலாம்
கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பணிக்கு தகுதியுள்ளோர் விண்ணப்பிக்கலாம்
கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பணிக்கு தகுதியுள்ளோர் விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜூன் 27, 2024 10:43 PM
கோவை: கோவை கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் காலியாக உள்ள உதவியாளருடன் இணைந்த கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பணியிடத்தை, தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப, முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாதச்சம்பளமாக 13,240 ரூபாய் வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில், கம்ப்யூட்டர் கல்வியியல் பட்டய படிப்பு(DCA)முடித்திருக்க வேண்டும். தட்டச்சு தமிழ் மற்றும் ஆங்கிலம் முதுநிலை தகுதி, நிறைவு செய்திருக்க வேண்டும். கம்ப்யூட்டர் இயக்குவதில் சிறந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 09.07.2024ல், 40 வயதிற்கு உட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும். தகுதியுள்ள நபர்கள், சான்றிதழ்களின் நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு போட்டோவுடன் வரும் 09.07.2024, மாலை 5:45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
https://coimbatore.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, 'மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, அறை எண் 32, இரண்டாவது தளம், கலெக்டர் அலுவலக பழைய கட்டடம், கோவை- 641018' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.