ADDED : ஜூலை 06, 2024 02:21 AM
வால்பாறை;வால்பாறை, கருமலை எஸ்டேட் பள்ளி முன்னாள் மாணவர்கள் சார்பில் அறக்கட்டளையின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
வால்பாறை அடுத்துள்ளது கருமலை எஸ்டேட் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி. இந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சார்பில், ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில், 'கருமலைப்பளளி உதவும் அறக்கட்டளை' துவங்கப்பட்டுள்ளது.
அறக்கட்டளையின் புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. தலைவராக தெய்வானை, செயலாளராக அருள்தாஸ், பொருளாளராக திருநாவுக்கரசு மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.