/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஜே.இ.இ., தேர்வில் சாதித்த ஐன்ஸ்டீன் மாணவர்கள் ஜே.இ.இ., தேர்வில் சாதித்த ஐன்ஸ்டீன் மாணவர்கள்
ஜே.இ.இ., தேர்வில் சாதித்த ஐன்ஸ்டீன் மாணவர்கள்
ஜே.இ.இ., தேர்வில் சாதித்த ஐன்ஸ்டீன் மாணவர்கள்
ஜே.இ.இ., தேர்வில் சாதித்த ஐன்ஸ்டீன் மாணவர்கள்
ADDED : ஜூன் 13, 2024 11:51 PM

கோவை : கணபதி, நேரு நகர், ஐன்ஸ்டீன் பப்ளிக் பள்ளி மாணவர் ஸ்ரீராம், ஜே.இ.இ., முதன்மை நுழைவுத் தேர்வில் கோவை மண்டலத்தில் முதன்மை மாணவராகவும், அகில இந்திய அளவில் 48 (AIR) இடத்தையும் பிடித்துள்ளார்.
இதேபோல, மாணவர் சுமந்த் கோவை மண்டலத்தில் இரண்டாவது இடத்தையும், மாணவி லக்சயா பெண்கள் பிரிவில் முதல் இடத்தையும் பிடித்துள்ளனர்.பள்ளி வளாகத்தில் நடந்த விழாவில் பள்ளியின் இயக்குனர் சங்கீதா மற்றும் ப்ரிபேலி அகாடெமி நிறுவனர்களான வட்டிகாசலு, உல்லாஷ் அகர்வால், விஷால் ஜோஷி ஆகியோர் மாணவர்களை பாராட்டி, கவுரவித்தனர்.
ஜே.இ.இ., தேர்வில் வெற்றி பெற்ற கார்த்திக்ரிஷி, மதுஷ்யாம், கார்த்திக், சஞ்செய் மற்றும் நீட் தேர்வில் வெற்றி பெற்ற ஸ்ரீநிதி, தாரணி ஆகிய மாணவர்களும் கவுரவிக்கப்பட்டனர்.