/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசன சங்க நிர்வாகிகள் கூட்டம் ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசன சங்க நிர்வாகிகள் கூட்டம்
ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசன சங்க நிர்வாகிகள் கூட்டம்
ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசன சங்க நிர்வாகிகள் கூட்டம்
ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசன சங்க நிர்வாகிகள் கூட்டம்
ADDED : ஜூன் 16, 2024 11:42 PM

ஆனைமலை;ஆனைமலை அருகே புதிய ஆயக்கட்டு பாசன சங்க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசன சங்க நிர்வாகிகள் கூட்டம், வேதநாயகம் கலையரங்கில் நடந்தது. தலைவர் அசோக்குமார், செயலாளர் பிரபாகரன், பொருளாளர் முருகேசன், திட்டக்குழு தலைவர் செந்தில் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
பாசன சபையின் வாயிலாக ஒவ்வொரு சபைக்கும் குறைந்தபட்சம், 100 மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க முடிவு செய்யப்பட்டது.
ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் தொடர்பாக, அனைத்து விவசாய சங்கங்கள், பொது நல அமைப்புகளையும் இணைத்து ஒரு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.
பாசன கால்வாய்களில், ஊராட்சிகளில் கழிவுநீர் கலப்பது மற்றும் கால்வாயின் அருகில் உள்ள ரிசார்ட்டுகளில் இருந்து கழிவுகளை கொட்டுவது சமீப காலங்களில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அதைத்தடுக்க, துறை அதிகாரிகள் மற்றும் சப் - கலெக்டரிடம் நேரில் சந்தித்து மனு கொடுத்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும்.
கடந்தாண்டு பாசன நீர் பகிர்மானத்தின் போது, நீர்வளத்துறை வாயிலாக கொடுத்த நீர் அளவுக்கு மாறாக, கூடுதலாக பாலாறு பகுதிக்கு நீர் வழங்க அரசாணை பெற்றது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.