/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மின் சேவைகள் 'ஆன்லைன்' மார்க்கம் அபராதம் வசூலிக்கும் சூழல் இல்லை மின் சேவைகள் 'ஆன்லைன்' மார்க்கம் அபராதம் வசூலிக்கும் சூழல் இல்லை
மின் சேவைகள் 'ஆன்லைன்' மார்க்கம் அபராதம் வசூலிக்கும் சூழல் இல்லை
மின் சேவைகள் 'ஆன்லைன்' மார்க்கம் அபராதம் வசூலிக்கும் சூழல் இல்லை
மின் சேவைகள் 'ஆன்லைன்' மார்க்கம் அபராதம் வசூலிக்கும் சூழல் இல்லை
ADDED : ஜூன் 06, 2024 11:31 PM
பொள்ளாச்சி:அனைத்து சேவைகளும் 'ஆன்லைன்' வாயிலாக எளிதாக்கப்பட்டுள்ளதால், மின்நுகர்வோருக்கு அபராதம் விதிக்கும் சூழல் ஏற்படுவதில்லை, என, மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
மின் நுகர்வோருக்கு தடையில்லா மின் சப்ளை மற்றும் தேவைகள் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் பூர்த்தி செய்ய, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், சில வழிகாட்டுதல்களை நிர்ணயித்துள்ளது.
அதன்படி, விண்ணப்பித்து, 30 நாளுக்குள் புதிய மின் இணைப்பு வழங்க வேண்டும். புதிய மின் இணைப்பு, தற்காலிக மின் இணைப்பு, மின் இணைப்பு பெயர் மாற்ற சேவைகளுக்கு, ஒரு நாள் தாமதத்துக்கு, 100 ரூபாய் வீதம், அதிகபட்சம், ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.
மின்தடை ஏற்பட்டு குறிப்பிட்ட நேரத்துக்குள் இணைப்பு வழங்கப்படவில்லை எனில், ஒவ்வொரு, ஆறு மணி நேரத்துக்கும், 50 ரூபாய் வீதம், அதிகபட்சம், 2,000 ரூபாய், மின்னழுத்த புகாருக்கு, 250 ரூபாய் என, ஒவ்வொரு சேவை குறைபாடுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும்.
ஆனால், பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில், 'ஆன்லைன்' மற்றும் புகார் தெரிவிக்கும் எண் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் வாயிலாக, மின் நுகர்வோரின் பிரச்சனைக்கு தீர்வு காணப்படுகிறது. சேவையும் தாமதமாவதில்லை என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'சமீப ஆண்டுகளாக, மின் நுகர்வோருக்கு தடையற்ற மின்சாரம் வழங்கப்படுகிறது. மின் நுகர்வோரின் புகார்கள், உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்பட்டும் வருகின்றன.
பெரிய அளவிலான தொழில்நுட்ப பிரச்னைகள் தவிர, உடனுக்குடன் தீர்க்கப்பட வேண்டிய பிரச்னைகள் சரி செய்யப்படுகிறது. இதனால், சேவை தாமதத்தால், நுகர்வோருக்கு அபராதம் செலுத்தும் சூழல் இல்லை. மின்கட்டணம் செலுத்துவது உள்ளிட்ட பணிகளை நுகர்வோர் 'ஆன்லைன்' வாயிலாக மேற்கொள்கின்றனர். இதனால், மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையும் குறைந்துள்ளது,' என்றனர்.