/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தக்காளி விலை அதிகரிப்பால் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் தக்காளி விலை அதிகரிப்பால் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
தக்காளி விலை அதிகரிப்பால் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
தக்காளி விலை அதிகரிப்பால் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
தக்காளி விலை அதிகரிப்பால் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
ADDED : ஜூன் 21, 2024 12:08 AM
பொள்ளாச்சி:பொள்ளாச்சி சுற்றுப்பகுதி கிராமங்களில், விவசாயிகள் கூடுதல் பரப்பளவில், தக்காளி நாற்று நடவு மேற்கொள்ளவுள்ளனர்.
பொள்ளாச்சி சுற்றுப்பகுதி கிராமங்களில், கடந்த மாசி பட்டத்தில் விவசாயிகள் பலர், தக்காளி சாகுபடி செய்திருந்தனர். காலநிலை மாறுபாட்டால் கடும் வெப்பம் நிலவியது. வெப்பத்திற்கு தாக்குப் பிடிக்க முடியாமல் தக்காளி செடிகள் கருகின; விளைச்சல் பாதித்தது.
தக்காளி தட்டுப்பாடு காரணமாக, விலை உயர்ந்தது. ஆனால், தக்காளி மகசூல் குறைவாக இருப்பதால், விவசாயிகளுக்கு பலன் கிடைக்கவில்லை.
இதையடுத்து, கடந்த வைகாசி பட்டத்தில் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்தனர். கோடை மழைக்குப் பின், குளிர்ந்த சீதோஷ்ண நிலை காரணமாக, தக்காளி செடிகள் நன்கு வளர்ச்சி அடைந்துள்ளன.
சமீப காலமாக, அறுவடை துவங்கிய நிலையில், மார்க்கெட்டு தக்காளி வரத்து வழக்கம் போல் காணப்படுகிறது. அதேநேரம், கடந்த, 9ம்தேதி, 28 கிலோ கொண்ட தக்காளி பெட்டி, 1,100 ரூபாய் விற்றது. தற்போது, 1,500 வரை விற்கப்படுகிறது. கடைகளில், ஒரு கிலோ தக்காளி, 75 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
விவசாயிகள் கூறுகையில், 'தக்காளிக்கு அதிக விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில், அதிக பரப்பில் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது, நீர் ஆதாரங்கள் திருப்தியாக இருப்பதால், கூடுதல் பரப்பளவில், தக்காளி நாற்று நடவு மேற்கொள்ளவும் உள்ளோம்,' என்றனர்.