/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'குடி நோயாளிகள் மீட்பு மையம் வேண்டும் ' ஏ.ஐ.டி.யூ.சி. கட்டடத் தொழிலாளர் சங்கம் கோரிக்கை 'குடி நோயாளிகள் மீட்பு மையம் வேண்டும் ' ஏ.ஐ.டி.யூ.சி. கட்டடத் தொழிலாளர் சங்கம் கோரிக்கை
'குடி நோயாளிகள் மீட்பு மையம் வேண்டும் ' ஏ.ஐ.டி.யூ.சி. கட்டடத் தொழிலாளர் சங்கம் கோரிக்கை
'குடி நோயாளிகள் மீட்பு மையம் வேண்டும் ' ஏ.ஐ.டி.யூ.சி. கட்டடத் தொழிலாளர் சங்கம் கோரிக்கை
'குடி நோயாளிகள் மீட்பு மையம் வேண்டும் ' ஏ.ஐ.டி.யூ.சி. கட்டடத் தொழிலாளர் சங்கம் கோரிக்கை
ADDED : ஜூன் 25, 2024 12:23 AM
கோவை;தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப அனைத்து ஆரம்ப சுகாதார நிலையகளிலும், குடி நோயாளிகள் மீட்பு மையங்கள் அமைக்க வேண்டும் என, ஏ.ஐ.டி.யூ.சி., கட்டடத் தொழிலாளர் சங்கம்அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து, சங்கத்தின் மாநிலப் பொது செயலாளர் செல்வராஜ் கூறியிருப்பதாவது:
கள்ளக்குறிச்சி கருணாபுரம் கள்ளச்சாராய சாவு எண்ணிக்கை, ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது.
சாதாரணக் கூலித் தொழிலாளர்கள், ஐம்பதுக்கும் மேற்பட்டோர் மரணம் என்பது, சாதாரணமானதல்ல என்பதை, அரசு உணர வேண்டும்.
தமிழகத்தை பொறுத்தவரை, பூரண மதுவிலக்கு என்பதுதான் கட்டடத் தொழிலாளர் சங்கத்தின் நீண்ட கால கோரிக்கை. மதுவை படிப்படியாக ஒழிக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது போன்ற குற்றங்கள் நடந்தால், உடனடியாக கிராம நிர்வாக அதிகாரிகள் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். ஆனால் இந்த விஷயத்தில் அவர்கள் கடமை தவறி உள்ளனர்.
அரசு மதுபானக் கடைகளில் விற்கப்படும் மதுவின் விலை தான், சாதாரண மக்களை கள்ளச்சாராயத்தின் பக்கம் தள்ளி இருக்கிறது.
மாநிலத்தில் குடிநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குடி நோயாளிகளை மீட்க, சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், குடிநோயாளிகள் மீட்பு மையங்கள் அமைக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.