ADDED : ஜூலை 22, 2024 01:27 AM
கோவை;கோவை மத்திய சபை நிர்வாகக்குழு புனித வின்சென்ட் தே பால் சபை மற்றும் கோவை மறை மாவட்ட இளையோர் பணிக்குழு சார்பில், போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு, ரயில்வே ஸ்டேஷன் அருகே, ஜீவஜோதி ஆசிரமத்தில் நேற்று நடந்தது.
இதில், ஆயுதப்படை போலீஸ் உதவி கமிஷனர் சேகர் பேசுகையில், ''இளையோர், போதை எனும் அசுரனின் பிடியில் சிக்கி தவிக்கின்றனர். போதை என்பது தவறான பாதைக்கு வழிவகுக்கும். அதற்கு இளைஞர்கள் இடம் கொடுக்கக் கூடாது,'' என்றார்.
அருட்பணி விக்டர், புனித வின்சென்ட் தே பால் சபை மத்திய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் வின்சென்ட், தாமஸ் மற்றும் இளையோர் பலர் பங்கேற்றனர்.