/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு: பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பேரணி போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு: பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பேரணி
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு: பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பேரணி
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு: பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பேரணி
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு: பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பேரணி
ADDED : ஜூன் 23, 2024 11:02 PM

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், கல்லுாரி மற்றும் பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்ற போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து, 50க்கும் மேற்பட்டோர் இறந்த சம்பவம், தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருள் ஒழிப்பு குறித்து பொள்ளாச்சி போலீசார் சார்பில், விழிப்புணர்வு பேரணி நடந்தது.
பொள்ளாச்சி தாலுகா, வடக்கிப்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் சார்பில், விழிப்புணர்வு பேரணி, மகாலிங்கபுரம் ஆர்ச் அருகே நடந்தது. டி.எஸ்.பி., ஜெயச்சந்திரன் பேரணியை துவக்கி வைத்தார். இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், போலீசார் மற்றும் ஏ.ஆர்.பி., பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
அதில், போதை பொருட்களுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி மாணவர்கள், கோஷங்களை எழுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.மகாலிங்கபுரம் ஆர்ச் பகுதியில் துவங்கிய பேரணி, பொள்ளாச்சி ரோடு, காந்திசிலை வழியாக சப் - கலெக்டர் அலுவலகத்தில் நிறைவடைந்தது.
* பொள்ளாச்சி மேற்கு போலீசார், என்.ஜி.எம்., கல்லுாரி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. கல்லுாரியில் பேரணியை டி.எஸ்.பி., துவக்கி வைத்தார். இன்ஸ்பெக்டர் மற்றும் எஸ்.ஐ., பரமேஸ்வரன் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.
கல்லுாரி மாணவர்கள், விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியபடி, பாலக்காடு - பொள்ளாச்சி ரோடு, பஸ் ஸ்டாண்ட் வழியாக சென்று, சப் - கலெக்டர் அலுவலகத்தில் நிறைவு செய்தனர்.
* கிழக்கு போலீசார் சார்பில், பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லுாரியில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. கிழக்கு இன்ஸ்பெக்டர் ரத்னகுமார் மற்றும் போலீசார், கல்லுாரி நிர்வாகத்தினர் பங்கேற்றனர்.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு, புது பஸ் ஸ்டாண்ட் முதல் பழைய பஸ் ஸ்டாண்ட் வரை போதை பொருள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில், கிணத்துக்கடவு போலீசார் மற்றும் ஈஸ்வர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.
பேரணியில் பங்கேற்ற மாணவர்கள், போதை பொருள் தீமைகள் மற்றும் தடுப்பது குறித்து பதாகைகளை ஏந்தியபடி சென்று, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பேரணி முடிந்த பின், போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி மாணவர்களுக்கும் போதை பொருள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
* பொள்ளாச்சி அடுத்த நெகமம் போலீஸ் ஸ்டேஷன் சார்பில் போதை பொருள் பயன்பாடு தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. அவ்வகையில், ஊர்வலத்தில், சிறுக்களந்தை விக்னேஷ்வர் வித்யாமந்திர் மெட்ரிக் பள்ளி மாணவர்கள், அர்ஜூன் தொழில்நுட்பக் கல்லுாரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
போலீசார் பேசுகையில், 'மாணவர்கள், பள்ளிப் பருவத்தில் போதை வஸ்து பழக்கங்களுக்கு உள்ளாகக் கூடாது. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பயன்பாட்டை கண்டறிந்தால், எவ்வித அச்சமுமின்றி ஆசிரியர்கள் மற்றும் போலீசாரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றனர்.
போதை ஒழிப்பை வலியுறுத்தியும் மாணவர்கள் நெகமம் பேரூராட்சிக்கு உட்பட்ட முக்கிய வீதிகள் வழியாக பேரணி நடத்தினர். பள்ளி ஆசிரியர்கள், கல்லுாரி பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.