Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அரசு பஸ்களில் 'வைப்பர்'  மக்கர்; திணறும் டிரைவர்கள்

அரசு பஸ்களில் 'வைப்பர்'  மக்கர்; திணறும் டிரைவர்கள்

அரசு பஸ்களில் 'வைப்பர்'  மக்கர்; திணறும் டிரைவர்கள்

அரசு பஸ்களில் 'வைப்பர்'  மக்கர்; திணறும் டிரைவர்கள்

ADDED : மார் 12, 2025 10:36 PM


Google News
பொள்ளாச்சி; பொள்ளாச்சி - கோவை இடையே இயக்கப்படும் சில அரசு பஸ்களில், 'வைப்பர்' சரியாக இயங்காததால், மழையின்போது டிரைவர்கள் சிரமப்படுகின்றனர்.

ஒவ்வொரு வாகனத்தின், முகப்பு கண்ணாடியில் விழும் மழை நீரை துடைப்பதே, 'வைப்பர்' கருவியின் பயன்பாடு. மழைநீரை நன்றாக துடைத்து, கண்ணாடி பளிச் என்று தெரிந்தால் மட்டுமே, டிரைவரால் சாலையை சரியாக கவனித்து வாகனத்தை இயக்க முடியும்.

அவ்வாறு இருக்கையில், பொள்ளாச்சி - கோவை இடையே இயக்கப்படும் சில அரசு பஸ்களில், 'வைப்பர்' சரியாக இயங்காமல், டிரைவர்கள் தட்டுத்தடுமாறி இயக்குவதாக, பயணியர் புகார் தெரிவித்துள்ளனர்.

பயணியர் கூறியதாவது:

பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் துாறல் மழை பரவலாக பெய்தது. அப்போது, டி.என்.38 என் 3279 எண் கொண்ட அரசு பஸ்சில் வைப்பர் இயங்காமல் இருந்தது. டிரைவர், கண்டக்டரிடம் கேள்வி எழுப்பினால், 'வைப்பர்' மோட்டார் பழுது என தெரிவித்தனர்.

அவ்வாறு இருந்தும், டிரைவர் பஸ்சை இயக்கியதால், பயணியர் அச்சமடைந்தனர். கனமழை பெய்தால், பஸ்சை ஓட்டுவதற்கு சிரமம் ஏற்படும். பழுதடைந்த உதிரிபாகங்களை மாற்றி, புதிதாக அமைக்க வேண்டும். அரசு பஸ்சை நம்பி வரும் பயணியரின் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும்.

இவ்வாறு, கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us