/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அதிகாரிகள் மெத்தனத்தால் குடிநீர் விநியோகம் பாதிப்பு 10 நாட்களாக குடிநீர் விநியோகம் பாதிப்பு; அதிகாரிகள் மெத்தனம் 10 நாட்களாக குடிநீர் விநியோகம் பாதிப்பு அதிகாரிகள் மெத்தனத்தால் குடிநீர் விநியோகம் பாதிப்பு 10 நாட்களாக குடிநீர் விநியோகம் பாதிப்பு; அதிகாரிகள் மெத்தனம் 10 நாட்களாக குடிநீர் விநியோகம் பாதிப்பு
அதிகாரிகள் மெத்தனத்தால் குடிநீர் விநியோகம் பாதிப்பு 10 நாட்களாக குடிநீர் விநியோகம் பாதிப்பு; அதிகாரிகள் மெத்தனம் 10 நாட்களாக குடிநீர் விநியோகம் பாதிப்பு
அதிகாரிகள் மெத்தனத்தால் குடிநீர் விநியோகம் பாதிப்பு 10 நாட்களாக குடிநீர் விநியோகம் பாதிப்பு; அதிகாரிகள் மெத்தனம் 10 நாட்களாக குடிநீர் விநியோகம் பாதிப்பு
அதிகாரிகள் மெத்தனத்தால் குடிநீர் விநியோகம் பாதிப்பு 10 நாட்களாக குடிநீர் விநியோகம் பாதிப்பு; அதிகாரிகள் மெத்தனம் 10 நாட்களாக குடிநீர் விநியோகம் பாதிப்பு
ADDED : ஜூன் 16, 2024 11:19 PM
பெ.நா.பாளையம்:பில்லூர் குடிநீர் திட்ட பூஸ்டர் மோட்டார் பழுதால் கடந்த, 10 நாட்களாக நஞ்சுண்டாபுரம், சின்ன தடாகம், வீரபாண்டி ஊராட்சிகளில் குடிநீர் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட நஞ்சுண்டாபுரம், சின்னத்தடாகம், வீரபாண்டி ஊராட்சிகளில் சுமார், 50 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இந்த ஊராட்சிகளுக்கு நாள் ஒன்றுக்கு மொத்தமாக, 5 லட்சம் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்பட வேண்டும்.
பில்லூர் குடிநீர் திட்டம் குழாய் காரமடை, மேட்டுப்பாளையம் ரோடு வழியாக பழனிகவுண்டர்புதூர் வருகிறது. அங்கு இருந்து பூஸ்டர் மோட்டார் வாயிலாக நஞ்சுண்டாபுரம், சின்னதடாகம், வீரபாண்டி ஊராட்சிகளுக்கு நீர் உந்தும் மோட்டார் வாயிலாக குடிநீர் மேல்உந்து செய்யப்படுகிறது. கடந்த பத்து நாட்களுக்கு முன்பு பழனிகவுண்டன்புதூரில் உள்ள பூஸ்டர் மோட்டார் பழுதானது.
ஆனால், இதுவரை மோட்டார் பழுது சரி செய்யப்படவில்லை. இது குறித்து, அந்தந்த ஊராட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகத்தினர் பலமுறை பில்லூர் குடிநீர் திட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
இது குறித்து, ஊராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், 'பில்லூர் குடிநீர் திட்டம் வாயிலாக விநியோகம் செய்யப்படும் நீர், 10 நாட்களுக்கு ஒரு முறை ஒவ்வொரு பகுதிக்கும் விநியோகம் செய்யப்படுகிறது.
பூஸ்டர் மோட்டார் பழுது காரணமாக இதுவரை பில்லூர் குடிநீர் சின்னதடாகத்தில் உள்ள எந்த பகுதிக்கும் விநியோகம் செய்ய இயலவில்லை.
அதிகாரிகளை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. மீறி அலுவலகத்துக்கு நேரில் சென்று தகவல் தெரிவித்தாலும், ஓரிரு நாளில் சரியாகிவிடும் என, சாக்கு, போக்கு சொல்லி அனுப்பி விடுகின்றனர். ஆழ்குழாய் நீரை வைத்து சமாளித்து வருகிறோம். பலர் கோவையில் உள்ள கடைகளில் இருந்து கேன் தண்ணீரை பெற்று சமாளித்து வருகின்றனர். இந்த பிரச்னைக்கு பில்லூர் குடிநீர் திட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.