/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பள்ளி விளையாட்டு விழாவில் டிரில், யோகா செய்து அசத்தல் பள்ளி விளையாட்டு விழாவில் டிரில், யோகா செய்து அசத்தல்
பள்ளி விளையாட்டு விழாவில் டிரில், யோகா செய்து அசத்தல்
பள்ளி விளையாட்டு விழாவில் டிரில், யோகா செய்து அசத்தல்
பள்ளி விளையாட்டு விழாவில் டிரில், யோகா செய்து அசத்தல்
ADDED : ஜூலை 22, 2024 01:38 AM

கோவை:பள்ளி விளையாட்டு விழா நிகழ்ச்சியில் மாணவர்கள் டிரில் மற்றும் யோகா செய்து அசத்தினர்.
கோவை அவிநாசி ரோட்டில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் ஜி.டி., பள்ளியின் விளையாட்டு விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக போலீஸ் வடக்கு துணை கமிஷனர் ஸ்டாலின் கலந்து கொண்டார். இதில் பள்ளி மாணவர்கள் டிரில் நிகழ்ச்சி நடத்தி அசத்தினர்.
இது காண்போரை கவர செய்தது. பள்ளி மாணவர்களின் பல வகையான யோகா பயிற்சி மற்றும் ஓட்ட போட்டி நடைபெற்றது.
இறுதியில் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, கோப்பைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் விமலா மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.