/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வரையாடுகள் இனப்பெருக்க காலம்; வனத்தில் கண்காணிப்பு தீவிரம் வரையாடுகள் இனப்பெருக்க காலம்; வனத்தில் கண்காணிப்பு தீவிரம்
வரையாடுகள் இனப்பெருக்க காலம்; வனத்தில் கண்காணிப்பு தீவிரம்
வரையாடுகள் இனப்பெருக்க காலம்; வனத்தில் கண்காணிப்பு தீவிரம்
வரையாடுகள் இனப்பெருக்க காலம்; வனத்தில் கண்காணிப்பு தீவிரம்
ADDED : ஜூலை 08, 2024 12:46 AM
பொள்ளாச்சி;ஜூன் முதல் ஆக., வரை, வரையாடுகளின் இனப்பெருக்க காலம் என்பதால், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் அவைகளின் வாழ்விடம் கண்காணிக்கப்படுகிறது.
நீலகிரி வரையாடு, மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கே உரிய சிறப்பினங்களில் ஒன்றாகும். இவை, கடல் மட்டத்தில் இருந்து, 1,300 மீட்டர் முதல் 2,600 மீட்டர் உயரம் கொண்ட உள்ள மலை உச்சிகளில் மட்டும் வாழும் பண்பு உடையன.
அழிந்து வரும் இனங்களில் ஒன்றான இந்த விலங்கு, காட்டாடு இனத்தில் மிகவும் பெரிய உடலமைப்பை கொண்டதாகும். இதன் மொத்த எண்ணிக்கையில், சுமார், ஆயிரத்துக்கும் மேற்பட்டவை கேரளா மாநிலம், இரவிகுளம் தேசிய பூங்காவிலும், சுமார், 300க்கும் மேற்பட்டவை, ஆனைமலை புலிகள் காப்பகம் வால்பாறை உள்ளிட்ட பல பகுதிகளிலும் காணப்படுகிறது.
இவ்விலங்கின் வாழ்விடமான வனப்பகுதிகளில், பணப்பயிர் சாகுபடி செய்யப்படுவதால், வாழ்விடம் மிகவும் பிளவுப்பட்டுள்ளது. தவிர, காடுகளில், கால்நடை மேய்த்தல், மின் உற்பத்திக்கென அணை கட்டுதல், சாலைகள் அமைத்தல் மற்றும் வேட்டையாடுதல் போன்ற மனிதர்களின் பல்வேறு நடவடிக்கைகளால், வரையடுகளின் வாழ்க்கை அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.
இதன் இனப்பெருக்க காலம், ஜூன் முதல் ஆக., வரையிலான தென்மேற்கு பருவமழை காலம் என்பதால், ஆனைமலை புலிகள் காப்பகத்தில், அவற்றின் வாழ்விடங்கள் பாதுகாப்பு நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
வனத்துறையினர் கூறுகையில், 'வரையாடுகளின் வாழ்விடங்கள் கண்டறியப்பட்டு, வேட்டைதடுப்பு காவலர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனைமலை புலிகள் காப்பகத்தில் அவற்றுக்கு பாதுகாப்பான சூழல் உள்ளது. மேலும், வால்பாறை மலைப்பாதையில் வரையாடுகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் கண்காணிப்பு செய்யப்படுகிறது,' என்றனர்.