/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ உயர்கல்வி குறித்த சந்தேகங்கள்; உதவி மையங்களை அணுக மாணவர்களுக்கு அறிவுரை உயர்கல்வி குறித்த சந்தேகங்கள்; உதவி மையங்களை அணுக மாணவர்களுக்கு அறிவுரை
உயர்கல்வி குறித்த சந்தேகங்கள்; உதவி மையங்களை அணுக மாணவர்களுக்கு அறிவுரை
உயர்கல்வி குறித்த சந்தேகங்கள்; உதவி மையங்களை அணுக மாணவர்களுக்கு அறிவுரை
உயர்கல்வி குறித்த சந்தேகங்கள்; உதவி மையங்களை அணுக மாணவர்களுக்கு அறிவுரை
ADDED : மார் 13, 2025 11:46 PM

கோவை: உயர்கல்வி குறித்த சந்தேகங்களுக்கு உதவி மையத்தை அணுக மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில், 171 அரசு கல்லுாரிகள், 162 அரசு உதவி பெறும் கல்லுாரிகள், செயல்பட்டு வருகின்றன. இக்கல்லுாரிகளில் பல ஆயிரம் மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
தமிழகம் உயர்கல்வி சேர்க்கை விகிதம், 49 சதவீதமாக இருந்து வருகிறது. இது தேசிய சராசரியை விட இரு மடங்கு அதிகம். இதை மேலும் அதிகரிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நான் முதல்வன், புதுமைப்பெண் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை இதற்காக செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் பிளஸ்2 முடிக்கும் மாணவர்கள் உயர்கல்வியில் சேராமல் தவிர்ப்பதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக அரசு கலைக் கல்லுாரிகளில் உயர்கல்வி குறித்த சந்தேகங்களை தீர்க்க உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இம்மையங்களில் மாணவர் சேர்க்கை தவிர, உயர்கல்வியில் அவர்களுக்கு இருக்கும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது.
மாணவர்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மாணவர்களின் தகுதிக்கு ஏற்ற உயர்கல்வியை பரிந்துரைப்பதுடன், பல்வேறு கல்விகள் குறித்த மாணவர்களின் சந்தேகத்துக்கு விளக்கம் அளிக்கின்றனர். இதைக்கருத்தில் கொண்டு மாணவர்கள் இந்த உதவிமையங்களை அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உதவி மைய அலுவலர் ஒருவர் கூறுகையில்,'உதவி மையங்கள் அரசு கல்லுாரிகளில் மாணவர்கள் சேர்க்கையின் போது அவர்களுக்கு உதவ துவங்கப்பட்டது.
தற்போது அவை மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கும் மையங்களாகவும் செயல்படுகின்றன. மாணவர்கள் தங்களுக்கு உள்ள சந்தேகங்களுக்கான விளக்கங்களை இங்கு அறிந்து கொள்ளலாம். அனைத்து வித ஆலோசனைகளும் வழங்கப்படும்,' என்றார்.