/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பணத்தை இழக்காதீர்' 'அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பணத்தை இழக்காதீர்'
'அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பணத்தை இழக்காதீர்'
'அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பணத்தை இழக்காதீர்'
'அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பணத்தை இழக்காதீர்'
ADDED : ஜூலை 11, 2024 11:23 PM

கருமத்தம்பட்டி : கருமத்தம்பட்டி அடுத்த கணியூரில் 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம் நடந்தது. கலெக்டர் கிராந்தி குமார் முகாமை துவக்கி வைத்தார். இம்முகாமில், பொருளாதார குற்றப்பிரிவு சார்பில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன. விழிப்புணர்வு குறும்படம் ஒளிபரப்பப்பட்டது.
டி.எஸ்.பி., கார்த்திகேயன், மக்களிடம் நோட்டீஸ்கள் வழங்கி கூறியதாவது: மாதந்தோறும் சந்தா கட்டினால், குறைந்த விலையில் வீட்டு மனைகள் திட்டம், மல்டி லெவல் மார்க்கெட்டிங், உடனடி கடன் வசதி என கவர்ச்சி திட்டங்களை அறிவித்து, போலி நிதி நிறுவனங்கள் மக்களை ஏமாற்றுகின்றன. மக்களும் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு, சேமித்த பணத்தை இழக்கின்றனர்.
எந்தவொரு நிதி நிறுவனமாக இருந்தாலும், ரிசர்வ் வங்கியிடம் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அதில் மட்டுமே பொதுமக்கள் டெபாசிட் செய்ய வேண்டும். சமூக வலைத்தளத்தில் வரும் விளம்பரங்கள், குறுஞ்செய்திகள் மூலம் அதிக வட்டி தருவதாக கூறினால் அவற்றை நம்ப வேண்டாம். குறுகிய காலத்தில் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறுவதை நம்ப வேண்டாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.